![]() | 2018 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
2017ல் நீங்கள் குருவின் பலத்தால், குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் திருமணம், புது மனை புகு விழா போன்ற சுப காரியங்களை உங்கள் வீட்டில் நடத்தி இருப்பீர்கள்.
ஆனால் இந்த 2018 ஆம் ஆண்டு நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். குரு 6ஆம் வீட்டிற்கும், சனி 8ஆம் வீட்டிற்கும் பெயருவதால் உங்களது குடும்பத்தில் தேவை இல்லாத சில பிரச்சனைகளும், சண்டைகளும் மற்றும் வாக்குவாதங்களு வரக் கூடும். உங்களது மனைவி/கணவர் அவரது இல்லாதார் வீட்டினர் பேச்சை கேட்டு கொண்டு உங்களுக்கு எதிராக இருப்பர். இது உங்களுக்கு ஒரு கடினமான காலகட்டமாகவே இருக்கும். மேலும் நீங்கள் பொறுமையாக இல்லை என்றால் உங்களது கணவன்/மனைவியை விட்டு சிறிது காலம் பிரிந்திருக்க நேரலாம். சிலருக்கு வேலை மற்றும் வெளிநாட்டு பயணம் காரணமாக உங்களது துனையை விட்டு சில மாதங்களுக்கு பிரிந்திருக்க கூடும்.
மேலும் உங்களது குடும்ப வாழ்க்கையில் நல்ல சூழல் நிலவவும் உங்களது உறவினர்களோடு நல்ல நட்புறவில் இருக்கவும் நீங்கள் அதிகம் பொறுமையுடன் சிந்தித்து செயல் பட வேண்டும். கடினமான வார்த்தைகளை உபயோகிப்பது உங்களது வாழ்க்கையில் உறவுகளுக்கு மத்தியில் மேலும் பிரச்சனைகளை அதிகரிக்கும். அதுமட்டும் அல்லாது, குடும்பத்தில் ஏதேனும் வழக்குகள் இருந்தால் (விவாகரத்து, சொத்து, மற்றும் குழந்தை காவல்) அவை இந்த பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு சாதகமாக இருப்பது சற்று சந்தேகமே. அதனால் நீங்கள் வழக்குகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. மேலும் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி நடந்து கொள்ளவது ஓரளவுக்கு பிரச்சனைகளை தவிர்க்க உதவும்.
Prev Topic
Next Topic