2018 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

ஜனவரி 01, 2018 - மார்ச் 09, 2018 சோதனையான காலம் (20 / 100)


சனி உங்களது அஸ்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். சனியும் குருவும் சேர்ந்து உங்களுக்கு ஓர் சவால் நிறைந்த மற்றும் மிக கடினமான சூழலையே உங்களது அனைத்து முயர்ச்சியிலும் தருவார்கள். உங்களது உடல் நலம் மேலும் பாதிக்க கூடும். மேலும் உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் அறுவை சிகிச்சை கூட செய்ய நேரலாம். அதனால் ஏதேனும் சிறு உடல நல பிரச்சனை அல்லது அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி தக்க வைத்தியம் எடுத்து கொள்வது நல்லது. அது மட்டும் இன்றி, உங்களது பெற்றோர்களின் உடல் நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
திருமணம் ஆனவர்கள் உங்களது கணவன் / மனைவியிடம் ஒற்றுமை இன்றி காணப்படும். இதனால் முக்கியமாக புதிதாக திருமணம் ஆனவர்கள் அதிக பிரச்சனைகளுக்கு உள்ளாவீர்கள். மேலும் குழந்தை பேருக்கு முயற்சிப்பதற்கு இது ஏற்ற காலம் இல்லை. நீங்கள் யாரையேனும் விரும்புகுரீர்கள் என்றால், அவர்களிடத்தில் சில மனஸ்தாபங்கள் ஏற்பட கூடும். உங்களது சொந்த விசயங்களை மட்ட்ரவர்களிடமும் நண்பர்களிடமும் பகிர்வதை தவிருங்கள். உங்களுக்கு மறைமுக எதிரிகள் அதிகம் தோன்ற கூடும். அதனால் உங்களது சொந்த விசயங்கலை உங்களுக்குள் வைத்து கொள்வது உத்தமும். மேலும் உங்களது இல்லத்தில் சுப காரியம் செய்வதற்கு இது ஏற்ற காலம் இல்லை. நீங்கள் ஓரளவக்காகினும் உங்களது உடல் நலத்தை காக்க நீங்கள் உடற் பயிற்சி, சுவாச பயிற்சி, யோகாசனம், த்யானம் செய்வது நல்லது. மேலும் கடவுள் வழிபாடு உங்களது மன பலத்தை அதிகரிப்பதோடு உங்களது பதற்றம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து சற்று காக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிக அழுத்தத்துடன் வேலை பார்க்க வேண்டியதிருக்கும். நீங்கள் உங்களது ப்ரொஜெக்டை சரியான நேரத்தில் முடிப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். மேலும் அது உங்களது கட்டுப் பாட்டை விட்டு போகக்கூடும். இந்த நட்டத்திற்கு நீங்கள் காரணம் என உங்களது மேலாளர் மற்றும் உடன் வேலை பார்ப்பவர்கள் உங்களை குறை கூறுவார்கள்.


உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் வேளையில் இருந்தும் எந்த ஒரு பலனும் இன்றி நீக்க படலாம். மேலும் நீங்கள் வெளி நாட்டில் வேலை பார்பவராக இருந்தால் உங்களுக்கு விசா கிடைப்பதில் பல சிக்கல்கள் ஏற்படலாம். மேலும் உங்களுக்கு எதிர் பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் நீங்கள் ஏமாற்ற்றம் அடையக் கூடும்.
தொழிலதிபர்கள் எதிர்பாராத வீழ்ச்சியை காண நேரலாம். மேலும் அதனால் உங்களது நிதி நிலை பெரிதும் பாதிக்க கூடும். உங்களது மகா தசை சாதகமாக இல்லை என்றால் உங்களது வங்கி கணக்கும் திவாலாகக் கூடும். புதிதாக எந்த ஒரு முதலீடும் செய்யாமல் இருப்பது நல்லது. உங்களது தொழில் இயக்க செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. அது தேவையற்ற நட்டத்தை தடுக்க உதவும்.
இந்த இரண்டாம் பாக பெயர்ச்சியின் காலகட்டத்தில் முடிந்த அளவிற்கு பயணத்தை தவிர்ப்பது நல்லது. தங்க நகை, பணம் அல்லது வேலை உயர்ந்த பொருட்கள் திருடு போவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதனால் நீங்கள் மிக கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் உங்களது பங்குதாரர்கலால், அல்லது விபத்து அல்லது வேறு சில காரணங்களால் வழக்குகளில் சிக்க வாய்புள்ளது. அதனால் மிக கவனமாக செயல் பட வேண்டும்.


உங்களது நிதி நிலை மற்றும் புதலீட்டில் அதிக கவனம் தேவை. உங்களது செலவுகள் அதிகரிப்பதால் சேமிப்பு குறையும். பங்கு சாந்தி வர்த்தகத்தில் ஈடுபட்டுல்லோர்கள் நட்டத்தை எதிர் கொள்ள நேரலாம். அதனால் ஊக வர்த்தகத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

Prev Topic

Next Topic