2018 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

அக்டோபர் 11, 2018 - டிசம்பர் 31, 2018 நல்ல மாற்றங்கள் தொடங்கும் (70 / 100)


அக்டோபர் 11, 2018 அன்று குரு பகவான் விருச்சிக ராசிக்கு பெயரவிருக்கிறார். குரு 7ஆம் வீட்டிலும் ராகு 3ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது உங்களது உடல் நலத்தை மீண்டும் பெற உதவும். நீங்கள் ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள். இது நாள் வரை இருந்த உடல் நால பிரச்சனைகளில் இருந்து சிறிது விடுபடுவீர்கள். மேலும் உங்கள் குடும்பத்தினர்களுடைய உடல் நலமும் மேம்படும். உங்களது மருத்துவ செலவுகள் குறைவதை கண்டு நீங்கள் மகிழ்ச்சி பெறுவீர்கள். நீங்கள் உங்களது குடும்பத்தினர்களிடம் இருந்து பிரிந்து இருக்கின்றீர்கள் என்றால் அவர்களுடன் சேருவதற்கு இது ஏற்ற காலமாகும். மேலும் திருமணம் ஆகாதவர்களுக்கு தக்க வரன் பார்க்க இந்த காலகட்டம் சாதகமாக உள்ளது. நீங்கள் உங்களது வீட்டில் சுப காரியங்கள் செய்யலாம். திருமணம் ஆனவர்கள் குழந்தை பேருக்கு முயற்ச்சிக்கலாம்.
நீங்கள் தற்போது இருக்கும் வேலையில் விருப்பம் இல்லை என்றால், புதிதாக வேலை தேடுவதற்கு இது ஏற்ற காலமாகும். உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கம். மேலும் புது வேலை உங்களுக்கு நல்ல சம்பளத்தையும் பதவியையும் தரும். இதனால் உங்களது வேலை சுமை குறையும். மேலும் நீங்கள் கடினமாக வேலை பார்த்ததற்கான பலன்களும் உங்களுக்கு கிடைக்கும்.
தொழிலதிபர்களுக்கு ஒரு திருப்புமுனை ஏற்படுத்தும் காலம் இது. புது முதலீட்டாளர்களால் உங்களது பண வரத்து அதிகரிக்கும். உங்களுக்கு வங்கி கடன் ஒப்புதல் பெரும். மெலுன் புதிய பங்குதாரர்களால் நீங்கள் உங்களது தொழிலை மேம்படுத்துவீர்கள். நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள். வெளி நாட்டிற்கு வேலை தேடி செல்ல அல்லாத குடியேற்றம் பெற இது தக்க சமயமாகும்.


உங்களது செலவுகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். இதனால் உங்களது நிதி நிலையம் ஓரளவிற்கு நல்ல நிலையில் இருக்கும். உங்களது வங்கி கடன் ஒப்புதல் பெரும். நீண்ட கால முதலீடு செய்பவர்கள் பங்கு சந்தை முதலீடுகள் செய்யலாம். எனினும் மற்றவர்கள் உங்களது மகா தசை எவ்வாறு இருக்கின்றது என்பதை அறிந்து அதன் படி பங்கு சந்தையில் முதலீடு செய்வது உத்தமம்.



Prev Topic

Next Topic