![]() | 2018 புத்தாண்டு உடல் நலம் / ஆரோக்கியம் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | உடல் நலம் / ஆரோக்கியம் |
உடல் நலம் / ஆரோக்கியம்
இந்த 2018ஆம் ஆண்டு உங்கள் ஆரோக்கியம் ஒரு சவாலாகவே இருக்கும்.
சனி 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் குரு 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் நுரையீரல் மற்றும் பித்தப்பையில் பிரச்சனை நேரக் கூடும். அதுமட்டும் இல்லாது உடலில் கொழுப்பு அதிகரிப்பதால் மேலும் சில உடல் நல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். அதனால் ஏதேனும் உடல் நல கோளாறு குறித்து உங்களுக்கு அறிகுறி தோன்றினால் நீங்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வது பெரிய பிரச்சனைகளை தவிர்க்க உதவும்.
உடல் நல கோளாறு மட்டும் இன்றி, நீங்கள் மன ரீதியாகவும் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். குடும்பம் மற்றும் அலுவலகத்தில் இருந்து தொடர்ந்து வரும் சங்கடங்களால் நீங்கள் மன அழுத்தத்தால் அவதிப் படக்கூடும். அதிக வருத்ததோடு காணப்படுவீர்கள். அதுமட்டும் இன்றி சரியான முடிவு எடுக்க முடியாமல் தவிப்பீர்கள். மேலும் உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால் அது மேலும் உங்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கக் கூடும்.
எனினும் உங்களுக்கு ஆறுதலான விடயம் யாதெனில், ராகு இந்த வருடம் முழுவதும் நல்ல இடத்தில சஞ்சரிப்பதால் உங்களுக்கு நண்பர்கள் வழியாக ஆதரவு கிடைக்கும். நீங்கள் ஆதித்ய ஹ்ரிதயம் மற்றும் ஹனுமான் சாலிசா தொடர்ந்து கேட்டு வருவது உங்களது உடல் நலத்தை அதிகரிக்கும். மேலும் சனிக்கிழமை தோறும் சிவனை வழிபட்டு வருவதால் உங்களது ஆரோக்கியம் மேம்படும். இதனோடு சனிக்கிழமைகளில் அசைவ உணவு உண்பதை தவிர்ப்பது மேலும் நல்ல பலனை கொடுக்கும்.
Prev Topic
Next Topic