![]() | 2018 புத்தாண்டு திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் |
திரைப்படம், கலை, அரசியல்
திரைத் துறையில் இருக்கும் நக்ஷத்திரங்கள், தயாரிப்பாளர்கள், விநியோகச்த்தர்கள் மற்றும் இயக்குனர்கள் இந்த 2018ஆம் வருடம் மிக கவனமாக செயல் பட வேண்டும். . புது வாய்ப்புகள் வரும் போது நீங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்கு முன் நன்றாக யோசிக்க வேண்டும். பல காரணங்களால் உங்களது படம் எதிர் பார்த்த வெற்றியை பெறுவதில் சில சிக்கல்கள் உள்ளது. முக்கியமாக நிதி பற்றாக்குறையால் அது தாமதமாகவும் வாய்ப்பு உள்ளது. மேலும் மறைமுக போட்டியாளர்களும் எதிரிகளும் உங்களுக்கு தோன்றி உங்களது வாய்ப்புகளை தட்டி விடுவார்கள். இதனால் உங்களது ஒப்பாந்ங்கள் ரத்தாக வாய்ப்பு உள்ளது. யார் உங்களுக்கு பின் இருந்து இப்படி செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வது கடினமே. நீங்கள் ஒரு பிரபலமான திரை நட்சத்திரமாக இருந்தால், உங்களது பேரையும் புகழையும் காப்பாற்றி கொள்ள நீங்கள் அதிகம் போராட வேண்டி இருக்கும். புது வாய்ப்பை தேடுவதை விட இருக்கும் மதிப்பையும் பேரையும் காப்பாற்றி கொள்ளவது முக்கியம். மேலும் நீங்கள் சில சங்கடங்களையும் சந்திக்க நேரலாம். அரசியல்வாதிகள் மறைமுக எதிரிகளால் பல தோல்விகளை சந்திக்க நேரிடலாம். அதனால் அதிக கவனம் தேவை.
எனினும் அக்டோபர் 11, 2018 அன்று நிகழும் குரு பெயர்ச்சியால் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
Prev Topic
Next Topic