2018 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடு ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடு


குரு பகவான் உங்களது ருண ரோகு சத்ரு ஸ்தானத்திலும், சனி அஸ்த்தம ஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளதால் இது நாள் வரை சேர்த்து வைத்த சேமிப்பு மற்றும் சொத்துக்களை இழக்க நேரிடும். இந்த வருடம் பங்கு சந்தை முதலீடு சாதகமாக இருக்காது. நீங்கள் போடும் பங்கு சந்தை முதலீட்டு கணக்கு மற்றும் ஆய்வு தவறாக போகலாம். மொத்தத்தில் பங்கு சந்தையில் முழுமையாக ஈடுபட இது ஏற்ற காலம் இல்லை.
நீங்கள் நீண்ட காலம் முதலீடு செய்திருந்தால் அது அதிக நட்டத்தை ஏற்படுத்தலாம். நீங்கள் ஒரு அளவுக்கு மட்டுமே பங்கு சந்தையில் ரிஸ்க் எடுக்கலாம். அதை மீறி செயல் பட்டால் கண்டிப்பாக நீங்கள் பெரிய அளவில் நட்டத்தை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். மேலும் அந்த நட்டத்தில் இருந்து மீண்டு வர உங்களுக்கு பல ஆண்டுகளும் ஆகலாம்.


இந்த 2018ஆம் வருடத்தில் வீடு மனை வாங்குதல் மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. மேலும் நீங்கள் வீடு அல்லது நிலம் வாடகைக்கு விட்டிருந்தாள் குடி இருப்பவர்கள் சில பிரச்சனைகள் செய்யக்கூடும். நீங்கள் ஏதேனும் பணம் கொடுக்கள் வாங்கல் செய்ய வேண்டியதுள்ளது என்றால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி நடந்து கொள்ளவது உத்தமம்.



Prev Topic

Next Topic