![]() | 2018 புத்தாண்டு பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்
இந்த 2018ஆம் வருடம் முழுவதும் பயணம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. செவ்வாய் மற்றும் கேது ஆகிய இரண்டு கிரகங்களும் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் இருப்பதால் வெளி நாட்டில் இருப்பவர்களுக்கு இது சாதகமற்ற சூழலை ஏற்படுத்த கூடும். நீங்கள் தொழில் தொடர்பாக அல்லது சுற்றுலா பயணம் செய்ய உள்ளீர்கள் என்றால், உங்களது வீட்டிற்கு காப்பீடு எடுப்பது முக்கியம். முக்கியமாக திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளதால், மதிப்பு மிக்க பொருட்களை, தங்க நகைகள் மற்றும் முக்கிய பத்திரங்கள் போன்றவற்றை வங்கி லாக்கரில் வைப்பது உத்தமம்.
மேலும், இந்த குரு பெயர்ச்சி காலாகட்ட்டத்தில் உங்களது பயணம் மகிழ்ச்சி மிக்கதாக இருக்காது . நீங்கள் தேவையற்ற சில செலவுகள் செய்ய வேண்டியதிருக்கும். கடைசி நேரத்தில் உங்களது பயணத்தையும் நீங்கள் ரத்து செய்யக்கூடும். மேலும் பயணத்தினால் உங்களது உடல் ஆரோக்கியமும் பாதிக்கக்கூடும்.எனினும், ராகு உங்களுக்கு நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், நீங்கள் கோயில் ஸ்தலங்களுக்கு செல்ல ஆன்மீக பயணம் திட்டமிடலாம்.
வெளிநாட்டில் குடியுரிமை பெற முயற்சிக்க இது ஏற்ற காலம் இல்லை. விசா கிடைப்பதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். மேலும் வேலை காரணமாக உங்களது விசாவை புதுப்பிக்க முயற்சிப்பதில் தாமதம் ஏற்படலாம். உங்களது ஆலோசனை வழங்கும் நிறுவனம் உங்களுக்கு சில விவரங்கள் கிடைப்பதில் தாமதம் செய்யலாம். இதனால் உங்களுக்கு அயல் நாட்டில் குடியுரிமை கிடைப்பதில் சில சிக்கல்கள் வரக்கூடும். செவ்வாய் மற்றும் கேதுவின் நிலைப்பாட்டால் உங்களுக்கு விசா கிடைக்காமல் போகலாம். நீங்கள் மீண்டும் தாய் நாட்டிற்கு திரும்பும் சூழல் ஏற்படலாம்.
Prev Topic
Next Topic