![]() | 2018 புத்தாண்டு தொழில் மற்றும் வேற்று வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | தொழில் மற்றும் வேற்று வருமானம் |
தொழில் மற்றும் வேற்று வருமானம்
இந்த 2018ஆம் வருடம் தொழிலதிபர்களுக்கு கலவையான பலன்களையே தரும். உங்களுக்கு அர்தஷ்டம சனி நடப்பதால் எந்த ஒரு முயர்ச்சியும் உங்கள் தொழிலில் எடுக்கும் மும் உங்கள் ஜாதகத்தை பார்த்து அதன் படி செய்வது நல்லது. ராகு மற்றும் குருவின் பலத்தால் இந்த வருடத்தின் தொடக்கம் சிறப்பாக உள்ளது.
உங்களது அதிர வளர்ச்சியை கண்டு புது முதலீட்டாளர்கள் ஆச்சரியப் படுவார்கள்.மேலும் அவர்கள் உங்களிடம் அதிக முதலீடும் செய்வார்கள். இது உங்களுக்கு பண வரத்தை அதிகரிப்பதோடு வேகமான வளர்ச்சியையும் உங்களது தொழிலில் தரும். மேலும் போதுமான அளவு பண வரத்து இருப்பதால் உங்களது நிதி பற்றாக்குறையும் நீங்கி நீங்கள் நல்ல லாபகரமான சூழலை காண்பீர்கள். உங்களது தொழிலை விரிவாக்க இது ஏற்ற காலமாகும்.
சுய தொழில் புரிவோர், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், கமிஷன் ஏஜெண்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளுக்கு இது நல்ல வளர்ச்சி தரக்கூடிய காலமாகும். மொத்தத்தில் உங்களது நிதி நிலையம் வளர்ச்சியும் உங்களை மகிழ்ச்சியடைய வைப்பதோடு இல்லாமல் புகழையும் பெற்று தரும். ரியல் எஸ்டேட் முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபகரமாகவே இருக்கும். எனினும் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் 2018ல் எதிர்பாராத பின்னடைவுகள் ஏற்படக் கூடும். அர்தஷ்டம சனியின் தாக்கம் அதிகரிக்கும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் பெரிய அளவில் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
Prev Topic
Next Topic