![]() | 2018 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
நான்காம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மற்றும் உறவினர்களுக்கு மத்தியில் பல பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும். எனினும் குரு மற்றும் ராகு நல்ல நிலையில் இருப்பதால் செப்டம்பர் 2018 வரை நீங்கள் மகிழ்ச்சியோடும் அதிர்ஷ்டத்தோடும் இருப்பீர்கள்.
நீங்கள் உங்களது வாழ்க்கை துணைவருடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். இதனால் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகளில் இருந்து இப்பொழுது விடுபடுவீர்கள். மேலும் உங்களது கணவன்/மனைவி இல்லத்தினரோடு நல்ல உறவு நிலையில் இருப்பீர்கள். அணைத்து நேர்மறை பலன்களுடனும் நீங்கள் உங்களது குடும்பத்தில் பல நல்ல மற்றும் சந்தோசமான சூழலை பெறுவீர்கள்.
இதுவரையில் ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருந்திருந்தால், அது சுமுகமாக தீர்வுக்கு வரும். ஜீவனாம்சம் மற்றும் குழந்தை காவல் போன்ற வழக்குகளில் இருந்து சாதகமான தீர்ப்போடு விடு படுவீர்கள். உங்களது குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். இது உங்களை மகிழ்விக்கும். மேலும் நீங்கள் உங்களது குடும்பத்தினரோடு பெரிய வீட்டிற்கு குடி பெயர்வீர்கள். இது உங்களுக்கு அதிக சௌகரியத்தை தரும். மேலும் உங்களது மகன் அல்லது மகளுக்கு திருமணதிற்கு வரன் தேட இது ஏற்ற காலகட்டமாகும். அதுமட்டும் இன்றி உங்களது இல்லத்தில் சுப காரியம் செய்ய இது தக்க சமயமாகும்.
எனினும் அக்டோபர் 2018 வந்தவுடன் இத்தகைய மகிழ்ச்சி நிறைந்த சூழல் மாறத் தொடங்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்க கூடும். இது உங்கள் மன வருத்தத்தை அதிகர்க்கும். வீட்டில் சுப காரியம் நிகழ்த்துவதை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic