![]() | 2018 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
இந்த 2018ஆம் ஆண்டு உங்கள் வருமானம் அதிகரித்து பண பற்றா குறை நீங்கும். தேவை அற்ற செலவுகள் குறையும். உங்களது நிலுவையில் இருந்து கடன்களை நீங்கள் விரைவாக அடைப்பீர்கள். குறிப்பாக ஜனவரி, பெப்ரவரி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நீங்கள் பண மழையில் நனைவீர்கள். உங்களது கடன் தொல்லையில் இருந்து நீங்கள் முழுமையாக வெளி வருவீர்கள். போதுமான அளவு உங்களுக்கு பணம் இருக்கும். மேலும் உங்களது சேமிப்பும் அதிகரிக்கும்.
நீங்கள் வீடு மனை வாங்க இது ஏற்ற காலகட்டமாகும். உங்களது வங்கி கடன் ஒப்புதல் பெற்று நீங்கள் எதிர் பார்த்த கடன் தொகை கிடைக்கும். உங்களது கடன் மதிப்பு அதிகரிக்கும். மேலும் அதிக தொகை கடன்களும் உங்களுக்கு கிடைக்கும். எனினும் அர்த்தாஷ்டம சனி நடை பெறவுள்ளதால் உங்களது வாகனத்திற்கு தகுந்த காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. எனினும் இந்த வருடத்தின் கடைசி மூன்று மாதங்கள் உங்களுக்கு தேவையற்ற செலவுகளை ஏற்படுத்தி உங்கள் சமிப்பை கரைக்க கூடும்.
Prev Topic
Next Topic