2018 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

ஜனவரி 01, 2018 - மார்ச் 09, 2018 நல்ல அதிர்ஷ்டம் (75 / 100)


இப்போது சனி பகவான் உங்களது ராசிக்கு 4ஆம் வீடான அர்த்தாஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். எனினும் ராகு மற்றும் குரு உங்களுக்கு சாதகமான நிலையில் உள்ளதால் சனியின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும். சனி உங்களது ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் சில உடல் உபாதைகளை நீங்கள் எதிர் கொள்ள நேரலாம். எனினும் உங்களுக்கு தக்க மருத்துவம் கிடைத்து விரைவில் குணமடைவீர்கள்.
உங்களது குடும்பத்தினர் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் மிக உறுதுணையாக இருப்பார்கள். மேலும் உங்களது மனைவி / கணவன் வீட்டார்கள் உங்களுடன் நல்ல உறவு நிலையில் பழகுவார்கள். நீங்கள் குடும்பத்தினர்களோடு சுப காரியங்களில் பங்கு பெற்று மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமனத்திர்க்கான முயற்ச்சி எடுப்பதற்கு இது ஏற்ற காலமாகும். நீங்கள் பெண்ணாக இருந்தால், சனி உங்களது ஜென்ம ராசியில் இருப்பதால் ஜாதகத்தை பார்த்து அதன் பின் திருமணத்திற்கு முயற்சிப்பது நல்ல வரனை கண்டறிய உதவும். காதலர்களுக்கு இது ஒரு சாதகமான காலமாகும்.


உங்களது உத்தியோகத்தில் நீங்கள் தொடர்ந்து வளர்ச்சியையும் வெற்றியையும் காண்பீர்கள். எனினும் சில தருணங்களில் உங்களது வேலை சுமையை சமாளிக்க முடியாமல் தினருவீர்கள். எனினும் உங்களது கடின உழைப்பிற்கு உங்களுக்கு தக்க சன்மானம் வழங்கப் படும். மேலும் உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் உங்களது வளர்ச்சியை பார்த்து பொறாமை படக் கூடும். தொழிலதிபர்கள் உங்களது தொழிலில் தொடர்ந்து ஒரு லாபகரமான மற்றும் வெற்றி நிறைந்த சூழலை காண்பீர்கள்.
குரு மற்றும் ராகுவின் பலத்தால் உங்களது நிதி நிலை நல்ல நிலையில் இருக்கும். சனி பகவான் உங்களது செலவுகளை அதிகரித்தாலும் உங்களது வரவு அதற்க்கு ஈடு கொடுக்கும் வண்ணம் அதிகமாகவே இருக்கும். மேலும் நீங்கள் உங்களது சேமிப்பை அதிகரிப்பீர்கள். புது வீடு வாங்குவதற்கான யோகம் உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சியின் இரண்டாம் பாக காலகட்த்தில் உள்ளது. மேலும் சரியாக திட்டமிட்டு நீங்கள் பங்கு சந்தையிலும் முதலீடு செய்யலாம். எனினும் சனி உங்களது ஜென்ம ராசியில் நிலவுவதால் உங்களது மகா தசை சாதகமாக இருந்தால் மட்டுமே நீங்கள் ஊக வர்த்தகத்தில் முதலீடு செய்யலாம்.



Prev Topic

Next Topic