![]() | 2018 புத்தாண்டு உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் |
உடல் நலம் மற்றும் ஆரோக்கியம்
குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும் ராகு 11ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால், நீங்கள் இது நாள் வரை அனுபவித்து வந்த உடல் நல பிரச்சனைகளில் இருந்து தக்க மருத்துவ உதவி பெற்று வெளி வருவீர்கள். உங்களது பிரச்சனையின் மூல காரணத்தை கண்டறிந்து அதற்க்கு தகுந்த வைத்தியத்தை பெறுவீர்கள். சனி பகவான் உங்கள் ராசியின் நான்காம் வீட்டில் சஞ்சரித்தாலும் பெரிதாக எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.
ராகு மற்றும் குரு நல்ல நிலையில் இருப்பதால் அவர்கள் உங்களை பெரும் அளவு நிகழ விருக்கும் சிக்கல்கள் அல்லது பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றுவார்கள். மேலும் செப்டம்பர் 2018 வரை நிகழும் சனி பெயர்ச்சியை எண்ணி நீங்கள் ஐயம் கொள்ளத் தேவை இல்லை. எனினும் உங்கள் சவால்கள் அக்டோபர் 2018ற்கு மேல் தொடங்கும்
வயிறு, முதுகு, கழுத்து அல்லது எலும்பு பகுதிகளில் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு தகுந்த வைத்தியத்தை உடனடியாக எடுத்து கொள்வது உத்தமம். முக்கியமாக, சனி பெயர்ச்சியால் இந்த உடல் உபாதைகள் ஏற்படுவதால் ஆயுர்வேத வைத்தியம் எடுத்துக் கொள்வது நல்லது. மேலும் உங்களது பெற்றோர்களின் உடல் நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தக்க மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. லலிதா சஹஸ்ரநாமம் கேட்பது மன அமைதியையும் நிம்மதியையும் தரும்.
Prev Topic
Next Topic