Tamil
![]() | 2018 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | வழக்கு |
வழக்கு
குரு 2ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால், நிலுவையில் இருந்த வழக்குகள் எதிர் பார்த்த தீர்ப்போடு வெற்றி பெரும். மேலும் ருண ரோக சத்ரு ஸ்தானம் மற்றும் அஸ்தம ஸ்தானம் இப்பொழுது முடிவடைகிறது. இதனால் உங்களது மறைமுக எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். நீங்கள் விவாகரத்து மற்றும் குழந்தை காவல் போன்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளீர்கள் என்றால், அது உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
சொத்து சம்பந்தமான பெயர் மாற்றம் மற்றும் பத்திர பதிவு ஏதேனும் செய்யவிருந்தால் அது வெற்றிகரமாக இருக்கும்.
எனினும் அக்டோபர் 11, 2018 அன்று குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு பெயருவதால் சாதகமற்ற சூழலை நீங்கள் சந்திக்க நேரலாம். எதிரிகளிடம் இருந்து காத்து கொள்ள தினமும் சுதர்சன மகா மந்திரம் கேட்பது உத்தமம்.
Prev Topic
Next Topic