![]() | 2018 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
இந்த வருடம் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனியுடன் தொடங்குகிறது. குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமான நிலையை வெளிபடுத்துகின்றது. இதனால் செப்டம்பர் 2018 வரை நல்ல பலன்களை நீங்கள் எதிர் பார்க்கலாம். நீங்கள் நல்ல ஆரோக்கியதோடு இருப்பீர்கள். மேலும் உங்கள் உறவுகளுக்கு மத்தியில் மற்றும் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் இப்பொழுது தீர்ந்து நல்ல சூழல் நிலவும். உங்களது குடும்பத்தினரிடம் இருந்து உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.அது மட்டும் இன்றி, நீங்கள் உங்களது தொழில் மற்றும் உத்யோகத்தில் நல்ல வளர்ச்சியையும் வெற்றியையும் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப் படும்.
ராகு உங்களது ராசியின் 11ஆம் வீட்டிற்கு பெயர்வதால், இந்த வருடம் உங்களுக்கு நிதி நிலை அதிர்ஷ்டம் நிறைந்ததாகவே இருக்கும். எனினும், குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு அக்டோபர் 11, 2018 அன்று பெயர்ந்த பின் நீங்கள் சோதனை மிகுந்த காலகட்டத்தை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். அர்தாஸ்டம சனியின் தாக்கத்தை இந்த வருடத்தின் கடைசி 3 மாதங்கள் காண்பீர்கள். உங்கள் உடல் நலத்தில், நிதி நிலையில் மற்றும் உத்தியோகத்தில் பிரச்சனைகள் வரக் கூடும். எனினும் மொத்தத்தில் இந்த 2018ஆம் ஆண்டு உங்களுக்கு ஒரு கலவையான பலன்களையே தரும்.
Prev Topic
Next Topic