2018 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடு ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடு


2ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ள குரு உங்களுக்கு பங்கு சந்தை மற்றும் முதலீட்டால் நல்ல லாபத்தை தருவார். உங்களது பங்கு மதிப்பு அதிகரிக்கும். அதனால் நீங்கள் அதிக லாபம் பெறுவீர்கள். வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்படுவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். எனினும் நீங்கள் ஊக வர்த்தகம் செய்ய விரும்பினால் உங்கள் ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி முயற்ச்சிப்பது நல்லது.
எனினும் சனி 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் ஜென்ம ஜாதகத்தின் பலன் இல்லாமல் வெற்றி பெறுவது சந்தேகமே. அர்தம சனியின் தாக்கம் செப்டம்பர் 2018 முதல் அதிகரிப்பதால் ஆகஸ்ட் 2018ல் உங்கள் மொத பங்கு சந்தை முதலீட்டையும் நிறுத்தி கொள்வது உத்தமம். எனினும் செப்டம்பர் 2018ற்கு மேல் நீங்கள் நீண்ட கால அரசு பத்திரங்களில் முதலீடு செய்யலாம். நீங்கள் பங்குகளை தொடர்ந்து வைத்து கொள்ள நினைத்தால் அதன் மதிப்பு வெகுவாக குறையும். இதனால் பெரிய அளவில் நட்டம் ஏற்படக் கூடும்.




Prev Topic

Next Topic