![]() | 2018 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
இந்த 2018ஆம் வருடம் உங்களுக்கு மகிழ்ச்சியாக தொடங்கும். அலுவலகத்தில் பல நல்ல மாற்றங்களை காண்பீர்கள். நீங்கள் தற்காலிக பணியில் இருக்குறீர்கள் என்றால், அது உங்களுக்கு நிரந்தரமாகும். பல நல்ல மற்றும் பெரிய ப்ரொஜெக்ட்டுகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களது மறைமுக எதிரிகள் பலம் இழப்பார்கள். நீங்கள் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் பெற்று உங்களது உத்யோகத்தில் அடுத்த நிலைக்கு செல்வீர்கள். உங்களது மேலாரிடமும் உடன் பனி புரிபவரிடமும் இருந்து பாராட்டு பெறுவீர்கள்.
நீங்கள் புது வேலைக்கு முயற்சிக்கின்றீர்கள் என்றல், நேர்காணலில் வெற்றி பெற்று நினைத்த உத்யோகத்தில் சேர இது ஏற்ற காலமாகும். உங்களுக்கு பெரி கம்பனிகளிலில் இருந்து அதிக சம்பளத்திற்கு வாய்ப்பு கிடைக்கும். சனி 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமான சூழல் இல்லை என்றாலும், அது உங்களது உதோயோகத்தையும் முன்னேற்றத்தையும் செப்டம்பர் 2018 வரை பாதிக்காது. உங்களுக்கு அதிக ஊக்கத்தொகையும் கிடைக்கும். உங்களது கடின உழைப்பை பாராட்டுவார்கள்.
இந்த வருடத்தின் கடைசி மூன்று மாதங்கள் உங்களுக்கு சிறப்பாக இல்லை. அலுவலகத்தில் அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிக்கலாம். பதவி உயர்வு கிடைப்பதில் ஏமாற்றம் ஏற்படலாம். அலுவலகத்தில் அரசியல் அதிகரிக்க கூடும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தாலோ அல்லது நீங்கள் கவனக் குறைவாக இருந்தாலோ வேலையை இழக்கும் சூழல் இந்த வருடத்தின் இறுதி பகுதியில் ஏற்படலாம்.
Prev Topic
Next Topic