![]() | 2019 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
இந்த வருடம் உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். குரு உங்களுக்கு சாதகமான நிலையில் இல்லை எட்ன்றாலும், சனி பகவான் மற்றும் கேது நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றனர். மேலும் குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் ஏப்ரல், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாத காலங்கள் சஞ்சரிப்பதால் நல்ல பலன்களை உங்களுக்குத் தருவார்.
உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்ய இது ஏற்ற நேரம். சுப காரியங்கள் நிகழ்த்தி வெற்றி பெறுவீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். ராகு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் மார்ச் 2019 முதல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் ஏற்படும். குறிப்பாக நீங்கள் சுப காரியம் நிகழ்த்தும் போது அத்தகைய உணர்வு உங்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் இந்த கிரகங்களின் நிலைப்பாடு நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களை விட்டு சில மாதங்கள் மே 2019 முதல் தற்காலிகமாக பிரிந்து இருக்க செய்யலாம். எனினும் உங்கள் உறவில் எந்த பின்னடைவுகளும் இருக்காது. அப்படி உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அது உடனடியாக அக்டோபர் 2019 வாக்கில் நல்ல தீரு பெரும். நீங்கள் இந்த வருடத்தின் கடைசி 3 மாதங்கள் நல்ல மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரும் புகழும் பெரும்.
Prev Topic
Next Topic