![]() | 2019 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்தாலும், உங்கள் நிதி நிலை பெரிதாக பாதிக்கப் படாது. எனினும் சொல்லப்போனால் நீங்கள் மிதமான வளர்ச்சியை உங்கள் நிதி நிலையில் காணலாம். உங்கள் பண வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும். உங்களுக்கு தற்போதையே வாழ்க்கை முறை சிறப்பாக இருக்கும். நீங்கள் நலல் சேமிப்பை அதிகரிப்பீர்கள்.
எனினும் நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பணம் கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் யாருக்காவது தானம் செய்ய நினைத்தால் அதை சரியான நபருக்கு செய்வதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள் . நீங்கள் உங்கள் செலவின் மீது ஒரு கண் வைக்க வேண்டும். பயணத்தில், வெளியில் உணவு விடுதியில் உண்ணும் போது, ஆடம்பர பொருட்கள் வாங்கும் போது உங்கள் செலவின் மீது சற்று கவனம் மற்றும் கட்டுப்பாடு வைத்துக் கொள்வது நல்லது.
அதிகரிக்கும் பராமரிப்பு செலவுகளால் உங்கள் வீட்டில் இருந்து வரும் வாடகை பாதிக்கப் படக் கூடும். நீங்கள் போதுமான சேமிப்பை வைத்திருந்தாள் அதனை உங்கள் வீட்டை புதுப்பிக்கவும் அல்லது நல்ல முதலீடுகள் செய்வதிலும், குறிப்பாக சொத்துக்கள் வாங்குவது போன்றவற்றில் பாதுகாப்பாக போடலாம். இதை நீங்கள் ஏப்ரல் 2019 அல்லது நவம்பர் 2019 வாக்கில் செய்யலாம்.
Prev Topic
Next Topic