2019 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி)

ஜனவரி 01, 2019 முதல் மார்ச் 27, 2019 வரை கலவையான பலன்கள் (50 / 100)


குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சியை குறிப்பிடத்தக்க விதத்தில் பாதிக்கக் கூடும். எனினும் சனி பகவான், ராகு மற்றும் கேது நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றனர். நீங்கள் இந்த பாகத்தில் கலவையான பலன்களை பெறுவீர்கள். நீங்கள் உங்கள் உடல் நலத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். சிறு உடல் நல பிரச்சனைகள் இருந்தாலும் அதிகப் படியான மருத்துவ செலவுகளை ஏற்படுத்தக் கூடும். மேலும் இது உங்களது சக்த்தியை குறைக்கக் கூடும். ராகு மற்றும் சனி பகவான் சாதகமான நிலையில் சஞ்சரிப்பதால் குடும்ப சூழல் உங்களுக்கு நன்றாக இருக்கும். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள்.
காதல் விசயங்களுக்கு இது நல்ல நேரம். திருமணம் ஆனவர்கள் நலல் உறவு நிலையில் இருப்பார்கள். குடும்பத்தில் குழந்தை பிறப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். நீங்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை எதிர் பார்த்தால் இந்த காலகட்டத்தில் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடலாம். அது தாமதம் ஆனாலும் இந்த 2019 வருடத்திற்குள் உங்களுக்கு கிடைக்கும்.


உங்கள் மறைமுக எதிரி உங்கள் வளர்ச்சியை தடுக்கப் பார்பார்கள். உங்களுக்கு பிரச்சனைகளை தருபவர்களை நீங்கள் சமார்த்தியமாக கையாள வேண்டும். உங்கள் வங்கியில் போதுமான பண இருப்பு இருக்கும். தொழிலதிபர்கள் கலவையான பலன்களைத் தருவார்கள். உங்கள் பங்கு சந்தை முதலீடுகள் நல்ல லாபம் ஈட்டித் தரும். ஊக வர்த்தகம் உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.


Prev Topic

Next Topic