2019 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி)

கண்ணோட்டம்


கடந்த வருடம் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை நீங்கள் கண்டிருப்பீர்கள். அதிர்ஷ்ட்ட வசமாக இந்த 2019 வருடமும் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். குரு உங்கள் ராசியின் 1௦வீட்டில் சஞ்சரித்து நல்ல நிலையில் இல்லை என்றாலும், சனி பகவான் சிறப்பான நிலையில் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றார். வரவிருக்கும் ராகு கேது பெயர்ச்சியும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. இதனால் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சியை நீங்கள் காண்பீர்கள்.
குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் அக்டோபர் 2018 வரை சஞ்சரித்து சில பிரச்சனைகளை மேல் நிர்வாகத்தால் உங்களுக்கு உருவாக்கி கொடுத்திருப்பார். அரசியல்களையும் நீங்கள் சந்தித்திருந்திருப்பீர்கள். மற்றபடி உங்களுக்கு வேறு எந்த பாதிப்புகளும் இருந்திருக்காது. குரு தற்போது உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து ஏப்ரல், நவம்பர் மற்றும் டிசம்பர் 2019 மாதங்களில் உங்களுக்கு பல நல்ல பலன்களைத் தருவார்.


உங்களது நீண்டகால கனவுகள் நனவாகும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்வீர்கள். வழக்குகள் ஏதேனும் இருந்தால், அதில் இருந்து இந்த வருடத்தின் இறுதி பகுதியில் சாதகமான தீர்ப்போடு வெளி வருவீர்கள். இந்த 2019ஆம் வருடம் உங்களுக்கு பல நல்ல பலன்களை தரும். எனினும் எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுப்பதாயினும் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து பின் செயல் படுவது நல்லது. இந்த 2019ஆம் வருடம் நீங்கள் பல வெற்றிகளை காண்பீர்கள்.


Prev Topic

Next Topic