2019 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி)

மார்ச் 27, 2019 முதல் ஏப்ரல் 25, 2019 வரை பொற்காலம் (90 100)


குரு உங்கள் 1௦ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு பெயருவார். சனி பகவான், கேது மற்றும் குரு இணைந்து உங்கள் லாப ஸ்தானத்தில் சந்தரித்து சிறப்பான பலன்களை உங்கள் நிதி நிலையில் ஏற்படுத்தக் கூடும். நீங்கள் விண்ணைத் தொடும் வளர்ச்சியையும் லாபத்தையும் பெறுவீர்கள். நல்ல ஆரோக்கியமான உடல் நிலை உங்கள் வாழ்க்கையை சௌகரியமாக வாழ வழி வகுக்கும்.
உங்கள் வாழ்க்கை துணைவர் மற்றும் அவரது குடும்பத்தினர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்க்கான பாக்கியத்தை தற்போது பெறுவார்கள். குழந்தை பிறப்பது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சித் தரும். நீங்கள் இந்த காலகட்டத்தில் உங்களுடைய வாழ்க்கைத் துணையை காண்பீர்கள். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் தருவார்கள். காதலர்கள் அடுத்தக் கட்டமாக திருமனத்திர்க்கான முயற்ச்சிகளை செய்யலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் நேரம் செலவிடுவது, மற்றும் விழாக்கள் மற்றும் சுற்றுலா போன்றவற்றில் பங்கு பெறுவது உங்களுக்கு மகிழ்ச்சித் தரும்.


உங்கள் உத்தியோகத்தில் நல்ல வெற்றியை பெறுவீர்கள். நீங்கள் நல்ல சம்பள உயர்வோடு அடுத்த நிலைக்கு பதவி உயர்வு பெறுவீர்கள். மேல் நிர்வாத்தில் இருப்பவர்களுடன் நேர்க்கமாவீர்கள். தொழிலதிபர்கள் விண்ணைத் தோடும் வளர்ச்சியை இந்த பாகத்தில் காண்பார்கள். உங்களுக்கு நீண்ட கால ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். அதனால் நல்ல பண வரத்து ஏற்படும்.
உங்கள் நிதி நிலை உங்களை மகிழ்ச்சி அடைய செய்யும். உங்களிடம் போதுமான பணம் இருக்கும். புது வீடு வாங்கி குடி பெயர இது ஏற்ற நேரம். உங்களது வங்கி கடன் எந்த ஒரு சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். முதலீட்டாளர்கள் மற்றும் நீண்ட காலம் பங்கு சந்தையில் இருப்பவர்கள் பெரிய அளவு லாபத்தை காண்பார்கள். முக்கிய கிரகங்கள் உங்கள் லாப ஸ்தானத்தில் இருப்பதால் நீங்கள் அதிர்ஷ்ட்ட சீட்டைக் கூட முயற்ச்சி செய்து பார்க்கலாம்.



Prev Topic

Next Topic