![]() | 2019 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | மூன்றாம் பாகம் |
ஏப்ரல் 25, 2019 முதல் செப்டம்பர் 17, 2019 வரை குறைந்த வேகம் (45 / 100)
இந்த வருடத்தில் இந்த பாகம் உங்களுக்கு ஒரு சோதனை காலமாக இருக்கும். சனி பகவான் பின்னோக்கி பயணிப்பார். ராகு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். நீங்கள் இந்த காலகட்டத்தில் குருவிடம் இருந்து எந்த பலனையும் எதிர் பார்க்க முடியாது. கேது மட்டுமே உங்களுக்கு நண்பர்கள் மூலமாக உதவி செய்வார். உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும். எனினும் தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் பிரணாயாம, யோகா, த்யானம் மற்றும் கடவுள் வழிபாடு செய்வதால் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொள்ளலாம். இது தேவையற்ற பயத்தையும் பதற்றத்தையும் போக்க உதவும்.
திருமணம் ஆனவர்கள் சற்று அன்யுனியம் குறைந்து காணப் படுவார்கள். மேலும் இதனால் மன அழுத்தம் ஏற்படும். நீங்கள் பெண்ணாக இருந்து கருவுற்றிருந்தாள் உங்கள் பெற்றோர்கள் அல்லது உறவினர்களின் உதவி எப்போதும் இருப்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள். காதலர்கள் தேவையற்ற மாற்றங்களை காண நேரிடும். எனினும் அது குறுகிய காலத்திற்கு மட்டுமே. உங்கள் சொந்த விசயங்களை பிறரிடம் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. உங்கள் நண்பராக இருந்தாலும் சரி. இந்த காலகட்டத்தில் சுப காரியங்கள் நடுத்துவதை தள்ளிப் போடுவது நல்லது.
அலுவலகத்தில் உங்கள் ப்ரோஜெக்ட்டை தக்க சமயத்தில் முடிப்பதில் அதிகம் அழுத்தத்தை காண நேரிடலாம். உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் உங்கள் வளர்ச்சியை கண்டு பொறாமைப் படுவார்கள். நீங்கள் இந்த அரசியலை சமாளிக்க அதிக நேரம் செலவிட வேண்டியதிருக்கும். அதனால் நீங்கள் மாலை நேரங்களிலும் கூட வார இறுதியிலும் கூட வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் கடினமான உழைப்பிற்கு ஏற்ற பாராட்டு மற்றும் சன்மானம் உங்களுக்குக் கிடைக்கும். தொழிலதிபர்கள் போட்டியாளர்களால் அதிக அழுத்தத்தை காண்பார்கள். நீங்கள் அதிக கடுமையாக உழைக்க வேண்டும். இருந்தாலும் இறுதியில் வெற்றிப் பெறுவீர்கள்.
நீங்கள் விசா ஸ்டாம்பிங் செய்ய வேண்டும் என்றால் அதனை இந்த காலகட்டத்தில் தவிர்பப்து நல்லது. இந்த காலகட்டத்தில் பயணம் செய்வதை தவிர்பப்து நல்லது. உங்கள் பண வரத்து சீராக இருக்கும். எனினும் அதிகரிக்கும் செலவுகள் உங்கள் சேமிப்பை பாதிக்கக் கூடும். பங்கு சந்தையில் உங்கள் முதலீடுகள் சில நட்டங்களை ஏற்படுத்தக் கூடும். அதனால் ஊக வர்த்தகத்தை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. நீண்ட காலமாக பங்கு சந்தியில் முதலீடுகள் செய்பவர்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic