2019 புத்தாண்டு தொழில் மற்றும் இதர வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

தொழில் மற்றும் இதர வருமானம்


இந்த வருடம் போட்டியாளர்களால் நீங்கள் அதிகம் சதி, மறைமுக எதிரிகள் மற்றும் எதிர் பாரா இழப்புகளை சந்திக்க நேரிடலாம். நீங்கள் ஏதேனும் ப்ரோஜெக்ட்டில் ஒப்பந்தம் செய்திருந்தால் அது ரத்தாக வாய்ப்பு உள்ளது. உங்கள் பண வரத்து குறைந்து கொண்டே போகும். மேலும் உங்கள் பங்குதாரருடன் சில கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் போட்டியாளரிடம் சண்டை போடும் சூழலும் ஏற்படக் கூடும். சட்ட பிரச்சனைகளையும் நீங்கள் சந்திக்க நேரிடலாம்.
உங்கள் நிர்வாக செலவுகளை சந்திக்க நீங்கள் அதிகம் பணம் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இது உங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் தேவைக்காகவும் இருக்கலாம். முதலீட்டாளர்கள் உங்களது புது யோசனைகளை செவி கொடுத்து கேட்கமாட்டார்கள். கடன் தருபவர்கள் வாங்கிய கடனை திருப்பி கொடும்ம்படியும் அதிக வட்டி தரும்படியும் உங்களுக்கு அழுத்தம் கொடுப்பார்கள்.


சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள், கமிசன் ஏஜெண்டுகள் சற்று கடுமையான காலகட்டத்தை கடக்க நேரிடலாம். எதிர்பாரா விதமாக உங்கள் செல்வாக்கும் சமூக ஊடகங்களில் அலல்து சமுதாயத்தில் பாதிக்கக் கூடும். ஏப்ரல் 2019 வாக்கில் குரு விரைவாக நகர்ந்து தனுசு ராசிக்கு பெயருவதால் சற்று நிவாரணம் கிடைக்கும்.


Prev Topic

Next Topic