2019 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களின் தேவைகளை புரிந்து கொள்ள அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். மேலும் அவர்களது எதிர் பார்ப்புகளையும் சரியாக புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் மனைவி / கணவன், மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மேலும் உங்கள் பெற்றோர்களிடனும் உங்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்கள், கருத்துவேறுபாடுகள் மற்றும் சண்டை ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு நெருக்கமானவர்கள் மார்ச் 2019 அல்லது ஆகஸ்ட் 2019 வாக்கில் உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கக் கூடும். எனினும் அது நீங்கள் அவருடன் அதிக நெருக்கமாகவும் உடைமையோடும் இருப்பதால் ஏற்பாடும். எனினும் அத்தகைய சூழலை சமாளிக்க நீங்கள் அதிகம் போராடத் தேவையில்லை. அதனை எளிதாக சமாளிக்க முடியும்.
உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்கமாட்டார்கள். மேலும் அவர்கள் காதல் விடயங்களை உங்களிடம் கொண்டு வந்து உங்களை மேலும் ஆச்சரியப்படுத்துவார்கள் . திருமணம் மற்றும் சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற நேரம் இல்லை. உங்கள் குடும்பத்தினர்களிடம் விவாகரத்து, சொத்து, குழந்தை காவல் போன்ற சட்ட பிரச்சனைகள் இருந்தால் அது நீங்கள் எதிர் பார்த்தபடி நடக்காது. மேலும் நீங்கள் இந்த சட்ட பிரச்சனைகளுக்காக அதிகம் செலவு செய்ய வேண்டிய சூழலும் ஏற்படலாம். உங்களுக்கு நிதி பிரச்சனைகள் அதிகரிக்கக் கூடும்.


ரகு பெயர்ச்சி மார்ச் 2019ல் நடக்க இருப்பதால் உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். எனினும் நீங்கள் குரு தனுசு ராசிக்கு நிரந்தரமாக நகரும் வரை, அதாவது நவம்பர் 4, 2019 வரை எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுக்காமல் காத்திருக்க வேண்டும். நீங்கள் கவனமாக இல்லை என்றால், ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 வரை இருக்கும் காலகட்டத்தில் அவமானப் படக்கூடிய சூழல் ஏற்படலாம்.


Prev Topic

Next Topic