2019 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

நிதி / பணம்


உங்கள் நிதி பொறுத்தவரையில் இது ஒரு மோசமான வருடமாக இருக்கக் கூடும். நீங்கள் தேவையற்ற பயணம் மற்றும் அதிகரிக்கும் மருத்துவ செலவுகளால் அதிகம் பணத்தை இழக்க நேரிடலாம். உங்கள் வீட்டிற்கு அதிகம் விருந்தினர்கள் வருவதால் செலவுகள் அதிகரிக்கக் கூடும். மேலும் அவர்கள் உங்கள் மன அமைதியையும் கெடுக்கக் கூடும். உங்கள் சேமிப்பு விரைவாக கரையும். நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டை நம்பி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.
போதுமான கிரெடிட் மதிப்பு இல்லாதலால் உங்கள் வங்கி கடன் ஒப்புதல் பெறாமல் போகலாம். மேலும் உங்களது கிரெடி கார்டின் காலகட்டம் முடிவடையும் நேரமும் நெருங்கலாம். அசலை விட அதிகம் வட்டி கட்டுவீர்கள். தங்க நகைகள் வாங்க இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் பயணம் செய்ய எண்ணினால், திருட்டு போகக் கூடிய சூழல் ஏற்படலாம்., அதனால் உங்கள் சொத்துக்களுக்கும் விலை உயர்ந்த பொருட்களுக்கும் போதுமான இன்சூரன்ஸ் காப்பீடு உள்ளதா என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.


உங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்து பார்க்க இது ஏற்ற நேரம் அல்ல. முடிந்த வரை கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. மேலும் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் கடன் வாங்க உடன் கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் அந்த கடனுக்கு நீங்கள் பொருபேர்க்கும் சூழல் ஏற்படலாம். நீங்கள் ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 வரை ஏமாற்றப் படக் கூடிய சூழல் ஏற்படலாம். பிரச்சனைகளின் தாக்கம் நவம்பர் 2019 முதல் குறையும்.


Prev Topic

Next Topic