2019 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

ஜனவரி 01, 2019 முதல் மார்ச் 27, 2019 வரை அதிக சவால்கள் தொடரும் (30 / 100)


இது உங்களுக்கு சவால் மிகுந்த காலகட்டமாக இருக்கும். உங்களது அதிர்ஷ்ட்டம் அஷ்டம குரு கால கட்டதில் குறைந்தே இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஏற்பாடும் மாற்றங்களை ஏற்றுக் கொள்வது சற்று கடினமாக இருக்கும். உங்களது மன நிலை தேவையற்ற பயம் மற்றும் பதற்றத்தால் பாதிக்க கூடும். நீங்கள் குடும்பத்தினர்களுடன் வாழ்ந்தாலும் அதிகமாக தனிமையில் இருப்பது போன்று உணருவீர்கள்.
கணவன் மனைவி மற்றும் உற்றார் உறவினர்களுடன் சில பிரச்சனைகள் ஏற்படக் கூடும். நீங்கள் அதிக பொறுமையோடு இருந்து இந்த காலகட்டத்தை கடக்க வேண்டும். சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற நேரம் இல்லை. காதலர்கள் எதிர்பாராமல் தங்களுக்கு வாக்குவாதங்களையும் கருத்து வேறுபாட்டினையும் வளர்க்க கூடும். இது தற்காலிக பிரிவினையை உருவாக்கும்.


இந்த காலகட்டத்தில் உங்களது உத்தியோக வளர்ச்சி பாதிக்கக் கூடும். உங்கள் மேல் அதிகாரி உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருக்க மாட்டார். அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்களுடனும், மேல் அதிகாரி ற்றும் முதலாளியிடமும் நீங்கள் சற்று அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே உங்களது வேலையை காப்பாற்றிக் கொள்ள முடியும். தொழிலதிபர்கள் தங்களது ஆர்டர்/ப்ராஜெக்ட் எதிர்பாரா விதமாக ரத்தாவதால் பின்னடைவுகளை எதிர் கொள்ள நேரிடலாம். நீங்கள் போட்டியாளர்களால் உங்களது நீண்ட கால வாடிக்கையாளர்களை இழக்க நேரிடலாம்.
உங்கள் செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் சேமிப்பு விரைவாக கரையும். நீங்கள் உங்களது அன்றாட பண தேவைக்கு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்ய முயன்றால், அது உங்களுக்கு நிதி இழப்பை/நடத்தை ஏற்படுத்தக் கூடும். பங்கு சந்தையில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் சூதாட்டம் அல்லது கசினோ போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.



Prev Topic

Next Topic