2019 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

நவம்பர் 04, 2019 முதல் டிசம்பர் 31, 2019 வரை நல்ல நேரம் (75 / 100)


¬நவம்பர் 4, 2019 அன்று குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு பெயருவதால் உங்களது சோதனை காலம் ஒரு முடிவுக்கு வரும். ராகு, குரு, மற்றும் சனி பகவான் உங்களுக்கு நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் இந்த காலகட்டத்தில் கிடைக்கும். உங்கள் உடல் நலம் நல்ல முன்னேற்றத்தை காணும். கடந்த நாட்களில் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை ஜீரணிக்கத் தொடங்குவீர்கள். உங்கள் வாழ்க்கையில் அதிகம் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள்.
உங்கள் வாழ்க்கை துணைவர் உங்களுக்கு உறுதுணையாக இந்த காலகட்டத்தில் இருப்பார். திருமணம் ஆனவர்கள் நல்ல அன்யோன்யத்தோடு இருப்பார்கள். குழந்தை பேருக்குத் திட்டமிட இது ஏற்ற நேரம். திருமணம் ஆகாதவர்கள் நல்ல வரன் பார்த்து திருமணம் நிச்சயிக்க இது ஏற்ற காலகட்டம். சுப காரியங்கள் நிகழ்த்துவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் காதல் வயப் பட அதிகம் வாய்ப்பு உள்ளது. நீங்கள் விரும்புபவரிடம் உங்கள் காதல் விருப்பத்தை கூற இது நல்ல நேரம். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் தருவார்கள்.


அலுவலகத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள் ஒரு முடிவுக்கு வரும். புது ப்ராஜெக்ட்டிற்கு சென்று விரைவான வளர்ச்சியை காண்பீர்கள். உங்களது புது முதலாளி உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார். தொழிலதிபர்களுக்கு புது ப்ராஜெக்ட்டுகள் கிடைக்கும்.சுய தொழில் செய்பவர்கள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் இந்த காலகட்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்களது நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பண வரத்து அதிகரிப்பதால் கடன் குறையும். பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்.



Prev Topic

Next Topic