![]() | 2019 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | காதல் |
காதல்
இந்த 2019ஆம் வருடம் காதலர்களுக்கு சவால் மிகுந்த வருடமாக இருக்கும். நீங்கள் தற்போது யாரையாவது விரும்புகுரீர்கள் என்றால், அவர் மீது நீங்கள் அதிகம் உடைமையோடு இருக்க நேரிடலாம். இது உங்கள் இருவருக்குள் புதிதாக ஒரு நண்பர் வரும்போது அதிகமாகக் கூடும். நீங்கள் அதிக பொறுமையோடு இருந்து நீங்கள் விரும்புபவரை புரிந்து கொண்டு தன்மையாக நடந்து கொள்ள வேண்டும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் இருவரும் தற்காலிகமாக பிரியக்கூடிய சூழல் ஏற்படலாம்.
உங்கள் மனதில் இருக்கும் வலி தூக்கத்தை பெரிதும் பாதிக்ககூடும். மேலும், நீங்கள் ஒரு தவறான நபருடன் காதலில் விழக்கூடும். யாரிடமும் உங்கள் காதல் விருப்பத்தை கூற இது தக்க நேரம் இல்லை. அப்படி நீங்கள் செய்ய முயர்ச்சித்தாள், நீங்கள் விரும்புபவர் உங்களுடன் நேரம் செலவிடலாம் ஆனால் பின்னர் உங்களை கோமாளி ஆக்கி விட்டு சென்று விடுவார். இதனால் நீங்கள் மற்ற நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன் அவமானப் படும் சூழல் ஏற்படலாம். இத்தகைய சூழல் குறிப்பாக ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 நடக்க வாய்ப்பு உள்ளது.
உங்கள் மனதில் தேவையற்ற பல எண்ணங்கள் நிறைந்திருக்கும். மேலும் திருமணம் ஆனவர்கள் அன்யுனியம் குறைந்து காணப் படுவார்கள். எனினும் அதிக உணர்ச்சியோடும் மனதில் அன்போடும் இருப்பார்கள். நீங்கள் குழந்தை பேருக்கு திட்டமிட எண்ணினால், உங்கள் பிறந்த சாதக பலனை முதலில் பார்த்து அதன் பின் எந்த ஒரு முடிவும் எடுப்பது நல்லது. எனினும் நவம்பர் 4, 2019 வரை திருமண முயற்ச்சிகள் எதுவும் எடுக்காமல் இருப்பது நல்லது.
Prev Topic
Next Topic