2019 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

கண்ணோட்டம்


இந்த வருடம் குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் நவம்பர் 4ம் தேதி வரை சஞ்சரிப்பார். சனி பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பது நன்மையும் தீமையும் கலந்த பலன்களை தரும். மார்ச் 2019ல் வரவிருக்கும் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக உள்ளது.
அஸ்தம சாதனத்தில் சஞ்சரிக்கும் குருவின் தாக்கம் ஜனவரி 2019 முதல் 3 மாதங்களுக்கு அதிகமாக காணப்படும். மீண்டும் ஆகஸ்ட் 2019 முதல் 3 மாதங்களுக்கு அதிகமாக இருக்கும். நீங்கள் உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் வளர்ச்சியை எதிர் பார்ப்பதை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு நவம்பர் 2019-ல் இடம் மாறினாலும், நல்ல பலன்களை விரைவில் எதிர் பார்க்க முடியாது.


எந்த முக்கிய முடிவுகள் எடுக்கும் முன், உங்களது பிறந்த சாதக பலனை பார்த்து அதன் படி நடப்பது நல்லது. விஷ்ணு சஹசர நாமம் கேட்பதும், பிரணாயம் செய்வது உங்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும்.


Prev Topic

Next Topic