2019 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

மார்ச் 27, 2019 முதல் ஆகஸ்ட் 11, 2019 வரை குறிப்பிட தக்க முன்னேற்றம் (60 / 100)


குரு மார்ச் 27, 2019 அன்று முன்னேறி அதிசாரமாக தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். ஏப்ரல் 25, 2019 அன்று குரு வக்கிர கதி அடைந்து, மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்து விடுகிறார். இந்த காலகட்டத்தில் குருவின் தாக்கம் பெரிய அளவிற்கு குறையும். சனி பகவான் இந்த காலகட்டத்தில் வக்கிர கதியில் இருப்பார். ராகு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து சில நல்ல பலன்களை உங்களுக்குத் தருவார்.
சமீப கடந்த காலத்தில் நிகழ்ந்த அதிர்ச்சியான சம்பவங்களிலிருந்து வெளி வர முயர்ச்சிப்பீர்கள். வரும் காலத்தில் உங்கள் வாழ்க்கையில் நிகழவிருக்கும் விசயங்களை ஏற்றுக் கொள்ள, உங்கள் மனபலத்தை அதிகப் படுத்திக் கொள்வீர்கள். உங்கள் உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை காண்பீர்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் சற்று குறைய ஆரம்பிக்கும். தற்போது இருக்கும் நிலையில் இருந்து எதுவும் மோசமான நிலைக்கு போகாமல் இருப்பதால், நீங்கள் சற்று மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிந்து இருந்தால் அவர்களுடன் சேர்ந்து வாழ இது ஏற்ற நேரம். எனினும் இந்த காலகட்டத்தில் திருமணம் செய்ய முயற்ச்சித்தால் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் குழந்தை பேருக்கு திட்டமிடுவதை தவிர்பப்து நல்லது.


புது வேலை வாய்ப்பிற்கு முயற்ச்சித்தால் உங்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனினும் உங்கள் சம்பளம் மற்றும் பதவி தற்போது இருப்பதை விட மற்றும் உங்கள் தகுதியை விட குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது. கடந்த நாட்களில் விசா குறித்த பிரச்சனைகள் இருந்தால் அது ஏப்ரல் 2019ல் நல்ல தீர்வு பெரும். நிதி பிரச்சனைகளில் இருந்து சற்று நிவாரணம் கிடைக்கும். பங்கு சந்தை பரிவர்த்தனைகளை முற்றிலுமாக தவிர்பப்து நல்லது. அவ்வாறு முதலீடு செய்ய எண்ணினால் உங்களது பிறந்த சாதக பலனை பார்த்து அதன் பின் முயற்ச்சிப்பது நல்லது. ஊடகத் துறையில் இருப்பவர்கள் நல்ல வாய்ப்புகளை பெறுவார்கள், மேலும் தங்களை பற்றிய வதந்திகளை சாமர்த்தியமாக கையாளுவார்கள்.


Prev Topic

Next Topic