2019 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடு ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடு


நீங்கள் கடந்த 2018ஆம் ஆண்டிலேயே கடந்த 3 மாதங்கள் அதிகம் துன்பங்களை சந்தித்திருந்திருப்பீர்கள். இந்த வருடமும் நீங்கள் சற்று அதிர்ஷ்ட்டம் இல்லாத சூலை சந்திக்க நேரிடலாம். ராகு மார்ச் 2019 முதல் நல்ல நிலையில் சஞ்சரித்தாலும், உங்களால் பங்கு சந்தை வர்த்தகத்தில் எதிர் பார்த்த லாபத்தை காண முடியாமல் போகலாம். மேலும் உங்கள் கோச்சார கிரகங்களின் அமைப்பின் படி எதிர்மறை சக்திகள் அதிகமாக இருப்பதால், நீங்கள் லாபத்தை இழக்கும் சூழலும் ஏற்படலாம். அதனால் வர்த்தகத்தை விட்டு முற்றிலுமாக விலகி இருப்பது நல்லது.
நீங்கள் நீண்ட கால முதலீடு செய்பவராக இருந்தாலும், நீங்கள் குறிப்பாக பெப்ரவரி, மார்ச், ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2019 போன்ற மாதங்களில் அதிகம் நட்டத்தை சந்திக்க நேரிடலாம். அதனால் பங்குகளில் முதலீடு செய்வதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.


புது வீடு வாங்கவோ அல்லது ரியல் எஸ்டேட் முதலீடு செய்யவோ இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் வாடகைக்கு உங்கள் வீடு அல்லது கடை போன்ற இடங்களை விட்டு இருந்தாலோ அல்லது உங்கள் வீட்டில் வாடகைக்கு குடி இருப்பவர்களாலோ சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். உங்களிடம் சொந்த இடம் இருந்தால், அதனால் வழி போக்கர்களால் பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். அதால் எந்தவிதமான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளையும் உங்களது சாதக பலனை பார்க்காமல் செய்வதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் கவனமாக இல என்றால், ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 வாய் பெரிய நிதி இழப்பை சந்திக்க நேடலாம்.



Prev Topic

Next Topic