2019 புத்தாண்டு பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்


அனேக கிரகங்கள் நல்ல நிலையில் இந்த வருடம் சஞ்சரிக்காததால், நீங்கள் தொலை தூர பயணம் செய்வதானால் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். வெளி நாட்டில் பிறரிடம் பழகுவதில் அசௌகரியமும் சரியான உதவி கிடைக்காமலும் போகலாம். நீங்கள் இதனால் அதிகம் வருத்தப் பட்டு, தனிமையை உணருவீர்கள். இது உங்கள் மன நிலையை பெரிதும் பாதிக்கக் கூடும். மேலும் மன அழுத்தத்தை அதிகரிக்கக் கூடும். இது உங்கள் உடல் நலத்தை பாதிப்பதோடு தேவையற்ற பயத்தையும் உருவாக்கக் கூடும். அதனால் சொந்த காரணங்களுக்காக தொலை தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது.
உங்களுக்கு பயண சீட்டு, தாங்கும் வசதி மற்றும் போக்குவரத்து ஆகியவற்றில் மும் பதிவு செய்வதில் போதுமான சலுகைகள் கிடைக்காமல் போகலாம். மேலும் அசௌகரியம் அதிகம் ஏற்படக் கூடும். நீங்கள் சுப காரியத்திற்காக பயணம் செய்ய முயற்சி செய்தாலும், செலவுகள் விண்ணைத் தோடும் அளவிற்கு உயரக் கூடும், உங்களால் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் போதுமான நேரம் செலவிட முடியாமல் போகலாம். கோவில் தளங்கள் மற்றும் புண்ணிய தளங்கள் செல்ல திட்டமிடலாம், தொலை தூர பயணத்தை முடிந்த வரை மேலும் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.


நீங்கள் வெளி நாட்டிற்கு பயணம் செய்ய எண்ணினால் உங்களுக்கு விசா குறித்த பிரச்சனைகள் வரக் கூடும். மேலும் நீங்கள் ஆகஸ்ட் 2019 வாக்கில் உங்கள் தாய் நாடு திரும்பும் சூழலும் ஏற்படலாம். எந்த குடியேற்ற சலுகைகளும், அதாவது கிரீன் கார்டு பெறுவது, நிரந்தர குடியுரிமை போன்றவை கிடைப்பது சந்தேகமே. நீங்கள் விசா ஸ்டாம்பிங் செய்ய பயணம் செய்ய வேண்டும் என்றால் அதற்க்கு நவம்பர் 15, 2019 வரை காத்திருப்பது நல்லது.



Prev Topic

Next Topic