2019 புத்தாண்டு உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

உத்தியோகம்


எதிர் பாரா விதமாக இந்த வருடம் உங்களுக்கு உத்தியோகம் பொறுத்தவரையில் ஒரு மோசமான வருடமாக இருக்கும். வேலை அழுத்தம் அதிகரிப்பதால் உங்களுக்கு உற்ச்சாகம் குறைந்து காணப் படுவீர்கள். உங்களால் கொடுக்கப்பட்ட வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். மேலும் உங்களுக்கு நிறைய மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள். உங்களுடன் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் உங்களது பலவீனத்தை அவர்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்வார்கள். மேலும் உங்களுக்கு எதிராக, குறிப்பாக தலைமை பதவியில் இருப்பவர்கள் பல சதிகளை செய்யக் கூடும்.
அலுவலகத்தில் அல்லது பொது இடங்களில் பெண்களிடம் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். நீங்கள் பெண்ணாக இருந்தால் உங்களுக்கு மேலாளர் மற்றும் உங்களுக்கு மேல் பதவியில் இருப்பவர்களால் பிரச்சனைகள் வரக் கூடும். புது நண்பர்கள் சேர்க்கையை தவிர்ப்பது நல்லது. இதனால் உங்களை பற்றி தவறான வதந்திகள் பரவக் கூடும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் ஆகஸ்ட் முதல் அக்டோபர் 2019 வரை அவமானப் படும் சூழல் ஏற்படலாம்.


நீங்கள் உங்கள் உத்தியோகத்தை காப்பாற்றிக் கொள்ள எவ்வளவு சங்கடங்கள் அலுவலகத்தில் நேர்ந்தாலும் பொறுமையோடு இருக்க வேண்டும். உங்கள் மீது பிரச்சனையை தரக் கூடிய ஊழியர்கள் புகார் கூறினாலும், நீங்கள் தக்க பதில் அளிக்க முயற்ச்சித்தால் அது உங்களுக்கு எதிராகவே மாறக் கூடும். மேலும் இது பிரச்சனைகளை அதிகமாக்கக் கூடும். எந்த ஒரு அவசர முடிவும் நீங்கள் வேலையை இழக்கும் சூழலை உருவாக்கக் கூடும். இந்த காலகட்டத்தில் நீங்கள் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை எதிர் பார்க்காமல், உங்கள் வாழ்வாதாரத்திற்காக உத்தியோகத்தை காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். மேலும் உங்கள் சொந்த பிரச்சனைகளுக்கு அமைதியாக தீர்வு காண முயற்சி செய்யுங்கள். நவம்பர் 2019 வாக்கில் நல்ல மாற்றங்களை நீங்கள் காணலாம்.


Prev Topic

Next Topic