![]() | 2019 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
இந்த வருடம் உங்கள் குடும்ப சூழலில் நல்ல மகிழ்ச்சி நிறைந்திருக்கும். குரு பகவான் உங்கள் பூர்வ புண்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் முற்றிலுமாக சரிசெய்யப் படும். உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் கடந்த காலத்தில் விவாகரத்து செய்திருந்தால், தற்போது உங்களுக்கு ஒரு புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ள நல்ல நேரம்.
உங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுக்கு மத்தியில் நல்ல மரியாதையை பெறுவீர்கள். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். உங்களுக்கு நல்ல செய்திகள் வரும். அது உங்களை பெருமை அடைய செய்யும். உங்கள் மகன் அல்லது மகளுக்கு நல்ல வரனை பார்க்க இது ஏற்ற நேரம். நீங்கள் திருமணம், புது மனை புகு விழ, ஆண்டு விழ போன்ற சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற நேரம்.
ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 வரை உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும். குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு நவம்பர் மற்றும் டிசம்பர் 2019ல் பெயர்ந்த பின்னரும் நீங்கள் நல்ல பலன்களை தொடர்ந்து பெறுவீர்கள். ஏனென்றால் கேது மற்றும் ராகு மற்றும் சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றனர்.
Prev Topic
Next Topic