2019 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

ஜனவரி01, 2019 முதல் மார்ச் 27, 2019 வரை சிறப்பான பலன்கள் (85 / 100)


இந்த காலகட்டத்தில் நீங்கள் அனைத்து உடல் உபாதைகளில் இருந்தும் வெளி வருவீர்கள். உங்களுக்கு நல்ல உறக்கம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் அதிக தன்னம்பிக்கையோடு இருப்பீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகள் கொண்டு வருவார்கள். உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உங்கள் குடும்பம் உறுதுணையாக இருக்கும். சுப காரியங்கள் நிகழ்த்த இது சிறப்பான நேரம்.
உங்கள் சொந்த வாழ்க்கையிலும் உறவுகளையும் எண்ணி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவர் என்றால் உங்களுக்கு ஏற்ற வரன் கிடைத்து திருமனத்திர்க்கான முயற்ச்சிகளை செய்வீர்கள். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்களது கனவு சுற்றுலா அல்லது உங்களது மனைவி/கணவனோடு சுற்றுலா பயணம் செய்வீர்கள். நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர்கள் அதற்க்கான பாக்கியத்தை பெறுவார்கள். நீங்கள் காதலில் விழுந்தாலும் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்களுக்கு காதல் விண்ணப்பம் வந்தால் அதனை ஏற்க்க இது தக்க சமயம்.


நீங்கள் அடுத்த நிலைக்கு பதவி உயர்வு பெற்றாலும் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்களுக்கு புது வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். பெரிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்தோடும் பதவியோடும் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்களது நீண்ட கால கனவு இந்த காலகட்டத்தில் நினைவாகும். தொழிலதிபர்கள் பெரிய அளவு வெற்றி பெறுவார்கள். பணம் இனி உங்களுக்கு ஒரு பிரச்சனையை அல்ல. உங்கள் தொழிலை விரிவு படுத்த இது ஏற்ற நேரம். சுய தொழில் புரிவோர்கள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் ஒரு பொற்காலத்தை காண்பார்கள். உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் ஒப்புதல் பெரும்.
உங்களது கடன்களை விரைவாக அடைப்பீர்கள். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் செய்ய, சொத்து வாங்க விற்க இரண்டையும் செய்ய இது ஏற்ற நேரம். ஊக வர்த்தகம் மற்றும் நாள் வர்த்தகம் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் இந்த காலகட்டத்தில் கோட்டீஸ்வரர் ஆகவும் வாய்ப்பு உள்ளது. உங்கள் பிறந்த சாதக பலன்கள் சாதகமாக இருந்தால் அதிர்ஷ்ட்ட சீட்டில் வெற்றி பெறவும் உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஒரு திரை நட்ச்சதிரமாக இருந்தால் உங்களுக்கு உங்கள் துறையில் நல்ல பெயரும் புகழும் கிடைக்கும்.



Prev Topic

Next Topic