2019 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

நவம்பர் 04, 2019 முதல் டிசம்பர் 31, 2019 வரை இனி எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டாம் (60 / 100)


நவம்பர் 2019 முதல் நீங்கள் எந்த ரிஸ்க் எடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. உங்கள் லாபத்தை பணமாக்கி வேறு வகையான பாதுகாப்பான முதலீடுகள் செய்ய முயற்சி செய்யுங்கள். குரு பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சாதகமற்ற நிலையில் இருப்பார். எனினும் சனி பகவான், ராகு மற்றும் கேது நல்ல நிலையில் சஞ்சரிப்பார்கள். ஜனவரி 23, 202௦ அன்று ஏற்படும் சனி பெயர்ச்சி உங்களுக்கு முக்கியமானது. அது உங்கள் உடல் நலத்தை பாதிக்கக் கூடும். எனினும் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது.
எந்த முக்கிய முடிவும் எடுக்கும் முன் நன்கு சிந்தித்து பின் செயல் படுவது நல்லது. சனி பகவான், ராகு மற்றும் கேதுவின் பலத்தால் திட்டமிட்ட சுப காரியங்கள் சிறப்பாக நடக்கும். எனினும் உங்களை சுற்றி நடக்கும் அரசியலை சமாளிக்க நீங்கள் அதிக பொறுமையோடு செயல் பட வேண்டும். காதலர்கள் தங்களது உறவில் சில சிக்கல்கள் ஏற்படக் கூடும்.


உங்கள் உத்தியோகத்தில் சில இறக்கம் அல்லது நிதானம் ஏற்படும். உங்களது தற்போதைய நிலையிலேயே பற்றிக் கொள்வது நல்லது. எந்த நிதி பிரச்சனைகளும் இருக்காது. எனினும் நீங்கள் உங்கள் நண்பர்கள் அலல்து உறவினர்களுக்கு கடன் கொடுத்தால் அது உங்களுக்கு திரும்ப வராது. ஊக வர்த்தகம் செய்யும் போது அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்ட்டம் குறைவாக இருக்கும். உங்கள் லாபத்தை பணமாக்குவது நல்லது. அதனை அசையா சொத்துக்கள் மீது முதலீடு செய்யலாம்.


Prev Topic

Next Topic