![]() | 2019 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
குரு உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில் இந்த வருடம் நவம்பர் 4, 2019 வரை சஞ்சரிப்பார். சனி பகவான் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தருவார். ராகு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கும் கேது 6ஆம் வீட்டிற்கும் மார்ச் 2019 இடம் மாறுவது சிறப்பாக உள்ளது.
அனைத்து முக்கிய கிரகங்களும் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் நீங்கள் இந்த வருடம் பல சிறப்பான அதிர்ஷ்ட்டங்களை பெறுவீர்கள். உங்களது நீண்ட கால கனவுகளும் விருப்பங்களும் நினைவாகும். உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். சுப காரியங்கள் நிகழ்த்துவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரும் புகழும் பெரும்.
உங்கள் வாழ்க்கையில் 2019 போல இப்படி ஒரு வருடத்தை பார்க்க முடியாது. இந்த மாதிரியான கிரக அமைப்புகள் பத்து வருடத்திற்கு ஒரு முறைதான் வரும். நீங்கள் நேர்மறை மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் காண முடியவில்லை என்றால், அது உங்களது பிறந்த சாதக பலனால்தான் இருக்கக் கூடும். அதனால் உங்களது பிறந்த சாதகத்தை நல்ல சோதிடரிடம் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்ளவது நல்லது.
கடக ராசி காரர்களுக்கு இது ஒஉர் பொற்காலமாக இருக்கும். நீங்கள் இந்த 2019ஆம் வருடம் முக்கியத்துவர் அந்தஸ்த்தை பெற்றாலும் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. இந்த காலகட்டத்தை பயன் படுத்தி உங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகா முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic