2019 புத்தாண்டு உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

உத்தியோகம்


உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த வருடம் சிறப்பான வளர்ச்சியை பெறுவார்கள். நீண்ட காலமாக பதவி உயர்வு பெற காத்திருந்தவர்கள், இந்த வருடம் குறைவான முயர்ச்சியிலேயே நீங்கள் எதிர் பார்த்த பதவி உயர்வு உங்களுக்கு கிடைக்கும். குரு பகவான் உங்களது நீண்ட கால கனவுகளையும், ஆசைகளையும் எண்ணங்களையும் நிறைவேற்றுவார். மேலும் புது வேலைக்கு விண்ணப்பிக்க இது ஏற்ற நேரம். நீங்கள் எளிதாக நேர்காணலில் வெற்றி பெற்று புது வேலை வாய்ப்பை பெறுவீர்கள். மேலும் உங்களுக்கு நல்ல மற்றும் பெரிய நிறுவனங்களில் இருந்து நல்ல சம்பளத்திற்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் விரும்பிய இடத்திலேயே உங்களுக்கு வேலை கிடைக்கும். மேலும் உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் மற்றும் மேலாளர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்களுடைய கடின உழைப்பு உங்களுக்கு அங்கிகாரத்தை பெற்றுத் தரும். மேலும் நல்ல நிதி சன்மானமும் உங்களுக்கு கிடைக்கும்.
உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், உங்களுக்கு நிர்வாகத்தில் இருக்கக்கூடிய பதவி கிடைக்கும். உங்களது ஒப்பந்த வேலை தற்போது நிரந்தரமாகும். மேலும் உங்களுக்கு கடந்த சமீப காலத்தில் ஏதேனும் சட்ட சிக்கல் ஏற்பட்டிருந்தால் அது தற்போது உங்களுக்கு சாதகமாக மாறும். அரசு வேலையும் உங்களுக்கு கிடைக்கும். மேலும் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு காப்பீடு, பங்குகள், வெளி நாட்டிருக்கு குடியேற்றம், விசா போன்ற சலுகைகளும் கிடைக்கும். நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் ஏற்படும் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் மற்றும் அதிகரிக்கும் நிதி நிலையையும் கண்டு இந்த வருடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic