2019 புத்தாண்டு தொழில் மற்றும் இதர வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

தொழில் மற்றும் இதர வருமானம்


இந்த 2019ஆம் ஆண்டு உங்களுக்கு நல்ல மாற்றங்களை கொண்டு வரும். இந்த வருடம் தொழிலதிபர்களுக்கு ஒரு நல்ல திருப்பு முனையாக இருக்கும். இந்த வருடத்தின் தொடக்கம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் போட்டியாளரை எதிர்த்து சிறப்பாக செயல் படுவீர்கள். உங்களுக்கு பெரிய வாடிக்கையாளர்களிடம் இருந்து நீண்ட கால ப்ராஜெக்ட் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் தொழிலை விரிவு படுத்தி மேலும் வேலையாட்களை பணியில் வைக்க இது நல்ல நேரம். எனினும் ஏழரை சனி காலம் நடப்பதால் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதன் படி முயற்சி செய்வது நல்லது..
நீங்கள் உங்கள் நிதி தேவைகளை எளிதாக சமாளிப்பீர்கள். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெரும். உங்களுக்கு வங்கி கடன் அல்லது புது முதலீட்டாளர்கள் மூலமாக போதுமான நிதி கிடைக்கும். எனினும் நீண்ட கால அடிப்படையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் தொழிலில் கிடைக்க வேண்டும் என்றால், தற்போது ஏழரை சனி காலம் நடப்பதால் தொழிலில் உங்கள் குடும்பத்தினர் பெயரை இணைத்துக் கொள்வது நல்லது. செப்டம்பர் 2019க்கு முன் உங்கள் லாபத்தை பணமாக்குதல் நல்லது. மேலும் ரிஸ்க் எடுப்பதை தவிர்ப்பதும் நல்லது. சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் சிறப்பான நேரத்தை காண்பார்கள். உங்கள் புகழும் பெயரும் சமுதாயத்தில் குருவின் பலத்தால் செப்டம்பர் 2019 வரை உயரும்.


நீண்ட கால அடிப்படையில் நீங்கள் தொழில் நடத்த வேண்டும் என்றால் உங்கள் பிறந்த சாதக பலன் பலமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் செப்டம்பர் 2019க்கு முன் முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் அடுத்த இரண்டு வருடத்திற்கு அதாவது 2௦2௦ மற்றும் 2௦21 ஆண்டுகள் நீங்கள் பல சவால்களை சந்திக்க நேரிடலாம்.



Prev Topic

Next Topic