2019 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


உங்கள் குடும்பம் மற்றும் உறவுகள் போருத்தவரை உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். இந்த வருடத்தின் முதல் 9 மாதங்கள் உங்களுக்கு மிக சிறப்பாக உள்ளது. குரு பூர்வ புண்ய ஸ்தானத்தை மற்றும் களத்திர ஸ்தானத்தை பார்வை இடுவதால் உங்களது குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் உங்கள் மனைவி/கணவன், அவரது குடும்பத்தினர்கள், குழந்தைகள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் அதிக நேரம் செலவிட்டு அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவுவீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். அது உங்களை பெருமை பட செய்யும்.
உங்களுக்கு தற்போது உங்கள் குடும்பத்தினர்களுடன் ஏதாவது சட்ட பிரச்சனைகள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமான தீர்ப்பு பெரும். நீங்கள் சமீப கடந்த காலத்தில் உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிந்திருந்தால் மீண்டும் அவருடன் சேர்ந்து ஒன்றாக வாழ இது நல்ல நேரம். சுப காரியங்கள் நிகழ்த்த இது நல்ல நேரம். செப்டம்பர் 2019 வரை உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரும் புகழும் பெரும்.


எனினும் அக்டோபர் 2019 முதல் விடயங்கள் நீங்கள் எதிர் பார்த்தது போல நடக்க வாய்ப்பு குறையும். ஏனென்றால் கிரகங்கள் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிக்கும். இதனால் நீங்கள் ஏமாற்றங்களையும் தோல்விகளையும் சந்திக்க நேரிடலாம். நீங்கள் தூக்கம் இல்லாத பல இரவுகளை கழிக்க நேரிடலாம், விஷ்ணு சஹசர நாமம் கேட்பது அக்டோபர் 2019க்கு மேல் உங்கள் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்க உதவும்.



Prev Topic

Next Topic