2019 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

செப்டம்பர் 17, 2019 முதல் டிசம்பர் 31, 2019 வரை சோதனை காலம் தொடங்கும் (40 / 100)


கடந்த சில மாதங்கள் உங்களுக்கு கிடைத்த சிறப்பான பலன்கள் சற்று குறையத் தொடங்கும். ஏழரை சனியின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கும். நீங்கள் இந்த பாக காலகட்டத்திற்கு வரும் போது உங்கள் மனதில் அடுத்த இரண்டு வருடத்திற்கு நீங்கள் சோதனை காலத்தில் இருக்கப் போவதை மனதில் நினைவு கொள்வது அவசியம். ஏழரை சனியின் தாக்கம் அடுத்த இரண்டு வருடங்களுக்கு அதிகமாக இருக்கும். அதனால் நீங்கள் இந்த காலகட்டத்திலேயே உங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுவது நல்லது.
முக்கிய கிரகங்கள் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் தூக்கம் இல்லாத பல இரவுகளை கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதை நீங்கள் பிரணாயாம மற்றும் த்யானம் செய்து ஓரளவிர்க்கு சரி செய்யலாம். உங்கள் குடும்பத்தினர்களுடன் சில உராய்வுகள் ஏற்படக் கூடும். உங்கள் வேலை சுமை அதிகரிக்கக் கூடும். உங்கள் மறைமுக எதிரிகள் அதிகம் பலம் பெறுவார்கள். தொழிலதிபர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் நீங்கள் பின்னடைவுகளை சந்திக்க நேரிடலாம். உங்கள் மகா தசை சாதகமற்று இருந்து நீங்கள் அடுத்த இரண்டு வருடங்களுக்கு நிதி இழப்பை சந்திக்க நேரிடலாம்.


உங்கள் அலுவலகத்தில் குறைந்த எதிர்பார்ப்புகளுடன் இருப்பது நல்லது. உங்கள் உடல் நலத்தையும் குடும்ப வாழ்க்கையையும் பாதுகாக்க அதிகம் நேரம் செலவிடுங்கள். முதலீடுகள் செய்வதில் அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதன் படி முதலீடுகள் செய்வது நல்லது. லலிதா சஹசர நாமம் மற்றும் விஷ்ணு சஹசர நாமம் கேட்பது ஜென்ம சனியின் தாக்கத்தில் இருந்து பெப்ரவரி 2௦2௦ முதல் உங்களை பாதுகாக்க உதவும்.


Prev Topic

Next Topic