![]() | 2019 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | காதல் |
காதல்
இந்த வருடம் குருவின் பலத்தால் காதலர்கள் மகிழ்ச்சியான நேரத்தை பெறுவார்கள். குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் விரும்புபவருடன் நீங்கள் மனம் விட்டு பேசி பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு பெற உதவுவார். நீங்கள் உங்கள் உறவை மீண்டும் நல்ல நிலையில் பெற இது உதவும். மேலும் திருமணம் ஆனவர்கள் நல்ல அன்யுனியத்தோடு இருப்பார்கள் . நீண்ட காலமாக குழந்தை பேருக்கு காத்திருந்த தம்பதியினர் அதற்க்கான பாக்கியத்தை பெறுவார்கள்.
ஏழரை சனி காலம் நடப்பதால் IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சை செய்ய எண்ணினால் நீங்கள் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதன் படி முயற்சி செய்வது நல்லது. நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் உங்களுக்கு ஏற்ற வரன் கிடைத்து அது திருமணம் நோக்கி நன்றாக நகரும். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் தருவார்கள். மேலும் நீங்கள் ஜூன் முதல் ஆகஸ்ட் 2019 காலகட்டத்தில் காதலில் விழவும் வாய்ப்பு உள்ளது.
இந்த வருடத்தின் கடைசி 3 மாதங்கள் சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் உறவை பாதிக்கக் கூடும். மேலும் அது சில எனாற்றங்களையும் ஏற்படுத்தக் கூடும். உங்களுக்கு அக்டோபர் 2019க்கு மேல் திருமணம் நடக்க இருந்தால் அதற்க்கு உங்கள் பிறந்த சாதக பலன் பலமாக இருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic