![]() | 2019 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 27, 2019 முதல் ஆகஸ்ட் 11, 2019 வரை கலவையான பலன்கள் (48/100)
குரு மார்ச் 27 முதல் ஏப்ரல் 25, 2019 காலகட்டத்தில் தனுசு ராசிக்கு பெயர்ந்து வக்கிர கதி அடைவார். அதன் பின் அவர் மீண்டும் விருச்சிக ராசிக்கு பின்னோக்கி பெயர்ந்து ஆகஸ்ட் 11, 2019 வரை சந்தரிப்பார். சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைவதால் தாக்கங்கள் சற்று குறைவாக இருக்கும். ராகு நல்ல நிலையில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார். மொத்தத்தில் இந்த பாகம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும்.
இந்த பாகத்தில் நீங்கள் முன்பே தொடங்கிய வேலைகள் சுமூகமாக செல்லும். எனினும் புதிதாக வேலையைத் தொடங்க இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்த திட்டமிட்டிருந்தால் அது நல்லபடியாக நடக்கும். எனினும் செலவுகள் நீங்கள் திட்டமிட்டதை விட அதிகமாக இருக்கும். குடும்பத்தினர்களுக்கிடையே சில வாக்குவாதங்கள் ஏற்படக் கூடும். எனினும் அது சமாளிக்கும் வகையிலும் சிறிது காலத்திற்கு மட்டுமே இருக்கும். உங்களுக்கு தொடர்ந்து வேலை அழுத்தம் மற்றும் பதற்றம் இருக்கும். உங்களுக்குத் தேவை இல்லாத பயம் மற்றும் பதற்றம் கிரகங்கள் 12ஆம் வீட்டில் சஞ்சரிபப்தால் ஏற்படக் கூடும்.
தொழிலதிபர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். உங்கள் மகா தசை சாதகமாக இல்லை என்றால் நீங்கள் உங்கள் லாபத்தை பணமாக்கி ஏழரை சனி காலம் நடப்பதால் ரிஸ்க் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உங்கள் தொழிலில் உங்கள் குடும்பத்தினர் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். செப்டம்பர் 2019 வரை குறுகிய கால ப்ரோஜெக்ட்டுகள் எடுத்து செய்வதில் வெற்றிப் பெறுவீர்கள்.
நிதி நிலை பொறுத்த வரையில் உங்கள் நேரம் சிறப்பாக உள்ளது. உங்களுக்கு அதிகமான வருமானமும் அதிகமான செலவுகள் இருக்கும். முடிந்த வரை இந்த காலகட்டத்தில் யாரிடமும் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. பங்கு சந்தை முதலீடுகள் நீண்ட கால முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். எனினும் நீங்கள் நீண்ட கால முதலீடு செய்யும் போது அதிக கவனத்தோடு இருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic