![]() | 2019 புத்தாண்டு தொழில் மற்றும் இதர வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | தொழில் மற்றும் இதர வருமானம் |
தொழில் மற்றும் இதர வருமானம்
தொழிலதிபர்களுக்கு இது ஒரு சிறந்த வருடமாக இருக்காது. நீங்கள் அடுத்த சில வருடங்களுக்கு உங்கள் தொழிலை நடத்த வேண்டும் என்றால் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதன் படியே முயற்சி செய்ய வேண்டும். குரு மற்றும் ராகு இந்த வருடம் நல்ல நிலையில் இருக்க மாட்டார்கள். மேலும் பெப்ரவரி 2௦2௦ முதல் உங்களுக்கு அஷ்டம சனி காலம் தொடங்குகிறது. அடுத்த சில வருடங்களுக்கு உங்கள் சவால்கள் அதிகம் இருக்கும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்கள் தொழிலை விட்டுவிட்டு லாபத்தை பணமாக்கி உங்கள் எதிர் காலத்திற்கு தேவையான வேறு திட்டங்களை செய்வது நல்லது. இல்லை என்றால் உங்கள் மனைவி/கணவன் நேரம் நன்றாக இருக்கும் உங்கள் குடும்பத்தினர்களின் பெயரை உங்கள் தொழிலில் சேர்த்துக் கொள்ளலாம்.
நீங்கள் இந்த வருடம் முக்கியமான மற்றும் நீண்ட காலமாக இருந்த வாடிக்கையாளர்களை உங்கள் போட்டியாளர்களிடம் இழக்கும் சூழல் ஏற்படலாம். மேலும் உங்கள் நிதித் தேவையை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். நீங்கள் உங்கள் தொழிலில் அரசு திட்டங்களில் மாற்றங்கள் செய்வதால், நம்பகமான தொழிலாளர்கள் வேலையை விட்டு விலகுவதால் போன்ற பல காரணங்களால் எதிர் பாரா பின்னடைவுகளை சந்திக்க நேரிடலாம்.
உங்கள் ப்ரோஜெக்ட்டை தக்க நேரத்தில் உங்களால் முடிக்க முடியாமல் போகலாம். இது உங்கள் மன அழுத்தத்தை அதிகப் படுத்தக் கூடும். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் பதில் கூற வேண்டிய இடத்தில் இருப்பீர்கள். இது உங்கள் செல்வாக்கை பாதிக்கக் கூடும். உங்கள் போட்டியாளர்கள் உங்களது இந்த பலவீனமான சூழலை பயன் படுத்திக் கொண்டு அவர்கள் பலனடைய முயற்சி செய்வார்கள். சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள், கமிசன் ஏஜெண்டுகள் கடினமாக எந்த ஒரு பலனும் எதிர் பார்க்காமல் உழைக்க வேனுட்ம். உங்களுக்கு நவம்பர் 2019 வாக்கில் குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக ஏற்படும் போது பல நல்ல மாற்றங்களை நீங்கள் காணலாம்.
Prev Topic
Next Topic