![]() | 2019 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
இந்த வருடம் உங்கள் நிதி பாதிக்கப்படக் கூடும். நீங்கள் செலவு செய்யும் போது அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். பயணம், மருத்துவம் மற்றும் குடும்ப செலவுகள் அதிகரிக்கக் கூடும். அதற்க்கான நீங்கள் அதிகம் செலவு செய்ய நேரிடலாம். உங்கள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை அதிகரிக்கக் கூடும். நீங்கள் இந்த் காலகட்டத்தில் கடன் வாங்கினால் அதை திருப்பித்தர கடினமாகி விடலாம். மேலும் இது உங்கள் கடன் சுமையை அதிகரிக்கலாம்.
உங்கள் நெருங்கின நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. இதனால் ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் நீங்கள் அவமானப் படும் சூழலும் ஏற்படலாம். ராகு, சனி பகவான் மற்றும் குருவின் பாதிப்புகள் ஒரே சமயத்தில் நடப்பதால் உங்கள் மன அமைதி பாதிக்கப் படக் கூடும். யாருக்கும் பணம் கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. அது உங்களுக்கு திரும்பி வாராமல் போகலாம். மேலும் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு வங்கியில் கடன் வாங்கு சுருட்டி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
உங்கள் கிரெடி மதிப்பு கடன் அதிகரித்துக் கொண்டு போவதால் குறைந்து கொண்டே போகும். இது உங்கள் வட்டி விகிதத்தை அதிகரிப்பதோடு உங்கள் நிலையையும் மோசமாக்கி விடும். உங்கள் வங்கி கடன் எதிர் பார்த்தப்படி ஒப்புதல் பெறாமல் போகலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் உங்கள் தங்க நகைகள் அல்லது சொத்துக்களை விற்கும் சூழல் ஆகஸ்ட் 2019 வாக்கில் ஏற்படலாம். எனினும் நவம்பர் 2019 முதல் அனைத்தும் நல்ல நிலைக்கு மாறும்.
Prev Topic
Next Topic