![]() | 2019 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | நான்காம் பாகம் |
நவம்பர் 04, 2019 முதல் டிசம்பர் 31, 2019 வரை குறிப்பிட தக்க முன்னேற்றம் (70 / 100)
விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு குரு நவம்பர் 04, 2019 அன்று இடம் மாறுகிறார். 7ஆம் வீட்டில் இருந்து குரு உங்களது ஜென்ம ராசியை பார்வை இடுகிறார். இதனால் நீங்கள் உங்களது உடல் உபாதைகளில் இருந்து வெளி வருவீர்கள். உங்கள் வாழ்க்கை துணைவருடன் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு பெற்று மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ்வீர்கள். உங்கள் குடும்பத்தினர்களை விட்டு வேலை காரணமாக பிரிந்து இருந்தால் அவர்களுடன் சேர்ந்து வாழ இது ஏற்ற நேரம். உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது ஏற்ற நேரம். இந்த காலகட்டத்தில் சுப காரியங்கள் நிகழ்த்துவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.
அலுவலகத்தில் இருக்கும் அரசியலை விட்டு வெளி வருவீர்கள். நல்ல போட்டியோடு நீங்கள் உங்கள் உற்பத்தியையும் அதிகப் படுத்துவீர்கள். நல்ல முன்னேற்றம் தரக் கூடிய ப்ரோஜெக்ட்டில் பனி புரிய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இது உங்களை மகிழ்ச்சி அடைய செய்யும். இதனால் நீங்கள் விரைவாக வளர்ச்சி மற்றும் வெற்றி பெறுவீர்கள். புது வேலை கிடைப்பதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சி உங்களுக்கு பலன் தரும். தொழிலதிபர்கள் அற்புதமான முன்னேற்றத்தை காண்பார்கள். விரைவாக வளர்ச்சி மற்றும் வெற்றி உங்களை நோக்கி வருவதை கண்டு நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள். உங்களுக்கு வங்கி கடன் மற்றும் முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி உதவி போன்ற வற்றால் போதிய நிதி கிடைக்கும். பயணம் செய்யவும் வெளி நாட்டிற்கு குடி பெயரவும் இது ஏற்ற நேரம்.
இந்த காலகட்டத்தில் உங்களது நிதி நிலை சிறப்பாக இருக்கும். உங்களது கடனை விரைவாக அடைப்பீர்கள். மேலும் கிரெடிட் கார்டு மற்றும் வங்கி கடன் பெற தகுதி பெறுவீர்கள். பங்கு சந்தை உங்களுக்கு லாபகரமாக இருக்கும். எனினும் உங்கள் மகா தசை உங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். மேற்கொண்டு பங்கு சந்தையில் முதலீடு செய்ய, ரியல் எஸ்டேட் முதலீடு செய்ய அல்லது அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய உங்களது பிறந்த சாதக பலனை பார்த்து அதன் படி முயற்ச்சிக்கலாம்.
Prev Topic
Next Topic