![]() | 2019 புத்தாண்டு உடல் நலம் / ஆரோக்கியம் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | உடல் நலம் / ஆரோக்கியம் |
உடல் நலம் / ஆரோக்கியம்
குரு உங்கள் ராசியின் 6ஆம் வீடான ருன ரோக சத்ரு ஸ்தானத்திலும் சனி பகவான் களத்திர ஸ்தானத்திலும் சஞ்சரிப்பது நீங்கள் உங்கள் உடல் நலத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை குறிக்கின்றது. உங்கள் மனைவி/கணவன் மற்றும் பெற்றோர்களின் உடல் நலம் பாதிக்கப் படக் கூடும். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கக் கூடும். உங்கள் குடும்பத்திற்கு போதுமான மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. கல்லீரலில் வீக்கம், கொழுப்பு சத்து மற்றும் பித்தப்பையில் பிரச்சனைகள் ஏற்படக் கூடும். ஏதேனும் எச்சரிக்கை அறிகுறி தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவி பெறுவது நல்லது. உங்களுக்கு முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படக் கூடும். இது பல உடல் உபாதைகளை ஏற்படுத்தக் கூடும். மன அழுத்தம் மற்றும் பதற்றம் உங்கள் சொந்த காரணங்களாலும் மற்றும் அதிகரிக்கும் பிரச்சனைகளாலும் ஏற்படக் கூடும். சரியான திசையில் உங்கள் வாழ்க்கை செல்லாததால் நீங்கள் அதிகம் மன வருத்தம் படக் கூடும்.
மார்ச் 2019ல் ராகு பெயர்ச்சியின் போது ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு பெயருவதால் பிரச்சனைகளின் தாக்கம் அதிகரிக்கக் கூடும். எனினும் ஏப்ரல் முதல் ஜூலை 2019 வரை சற்று நிவாரணம் கிடைக்கும். ஆதித்ய ஹ்ருதயம் மற்றும் ஹனுமன் சலிச கேட்பதால் உங்கள் உடல் நல பிரச்சனைகள் குறைவதோடு அதன் தாக்கமும் குறையும். சனிக்கிழமைகளில் சிவனை வழிபடுங்கள். வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது. நவம்பர் அல்லது டிசம்பர் 2019 வாக்கில் நீங்கள் குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு பெயருவதால் உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic