2019 புத்தாண்டு திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

திரைப்படம், கலை, அரசியல்


ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு இது ஏற்ற வருடம் இல்லை. சனி பகவான் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சந்தரிப்பதால் உங்களுக்கு சில வாய்ப்புகளைத் தரக் கூடும். எனினும் எதிர் பார்த்த நிதி பலன்கள் குறைவாகவே இருக்கும். உங்களுடன் வேலை பார்ப்பவர்களுடன் கடுமையான வாக்குவாதம் மற்றும் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு எதிராக மறைமுக அரசியலும் சாதியம் நடை பெறக் கூடும். முன்பே நீங்கள் ஒப்பந்தம் செய்திருந்த நல்ல வாய்ப்புகளை இழக்கும் சூழல் ஏற்படலாம். அல்லது அந்த ஒப்பந்தம் ரத்தாக வாய்ப்பு உள்ளது.
உங்களுக்கு எதிராக யார் விளையாடுகிறார்கள் என்பதை கண்டு பிடிப்பது கடினமாக இருக்கும். நீங்கள் ஒரு பிரபலமான திரை நட்ச்சத்திரமாக இருந்தால், உங்கள் பெயரையும் புகழையும் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். புது ப்ரோஜெக்ட்டுகளை தற்போது எடுப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. எந்த அவசர முடிவும் பெரிய அளவில் பண இழப்பை ஏற்படுத்தக் கூடும். மேலும் உங்கள் செல்வாக்கையும் இழக்க வைக்கக் கூடும். மேலும் அரசு திட்டங்களாலும் சில அரசியலாலும் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படக் கூடும். அரசியலில் இருப்பவர்கள் மறைமுக எதிரிகளை சந்திக்க நேரிடலாம். உங்கள் படத்தை நீங்கள் வெளியிட திட்டமிட்டிருந்தால் அதனை ஏப்ரல் மாதம் வெளியிடலாம் அல்லது நவம்பர் 2019 காத்திருப்பது நல்லது.







Prev Topic

Next Topic