![]() | 2019 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடு ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடு |
வர்த்தகம் மற்றும் முதலீடு
முக்கிய கிரகங்களான ராகு, குரு மற்றும் சனி பகவான் மற்றும் கேது இந்த வருடம் நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. இது பங்கு சந்தையில் வர்த்தகம் செய்பவர்களுக்கும் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிகுறி. உங்கள் பங்கு சந்தை கணிப்பும் கணக்கும் தவறாக போகக் கூடும். மேலும் பங்கு சந்தையில் முதலீடு செய்வது இந்த நேரத்தில் நல்லது அல்ல.
நீங்கள் நீண்ட கால முதலீடு செய்பவராக இருந்தால் நட்டத்தை தவறிக்க உங்கள் லாபத்தை பணமாக்கி பங்கு சந்தையை விட்டு வெளியேறுவது நல்லது. உங்கள் பணத்தை அரசு பத்திரம், சேமிப்பு, நிரந்தர வைப்பு நிதி போன்றவற்றில் போடுவது நல்லது. புது வீடு வாங்குவதையோ அல்லது ரியல் எஸ்டேட் முதலீடு செய்வதையோ நவம்பர் 2019 வரை தள்ளிப் போடுவது நல்லது. நீங்கள் உங்கள் வீடு எதையாவது வாடகைக்கு விட்டிருந்தால் அதில் குடி இருப்பவர்களால் சில பிரச்சனைகள் ஏற்படக் கூடும். இது குறிப்பாக மார்ச் மாதம் அல்லது ஆகஸ்ட் முதல் அக்டோபர் 2019 வரையிலான காலகட்டத்தில் ஏற்படக் கூடும்.
Prev Topic
Next Topic