![]() | 2019 புத்தாண்டு பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்
இந்த வருடம் உங்கள் பயணத்தில் பல தடைகளும் பிரச்சனைகளும் ஏற்படக் கூடும். மேலும் நீங்கள் விடுமுறையில் சென்றாலோ அல்லது தொழில் குறித்து பயணம் செல்ல நேர்ந்தாலோ , குறிப்பாக மார்ச் அல்லது செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2019 வாக்கில் உங்கள் விலை உயர்ந்த பொருட்களுக்கு காப்பீடு எடுத்தக் கொள்வது நல்லது. உங்கள் தங்க நகைகளை வங்கி பெட்டகத்தில் வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் பயணம் அசௌகரியத்தை கொடுக்கக் கூடும். மேலும் கடைசி நிமிடத்தில் உங்கள் பயணம் ரத்தாகவோ அல்லது உங்களது செலவு அதிகரிக்கவோ வாய்ப்பு உள்ளது.
குடியேற்ற பலன்களை பற்றி எதிர் பார்க்க இது ஏற்ற நேரம் இல்லை. மேலும் உங்களுக்கு விசா குறித்த சில பிரச்சனைகள் வரக் கூடும். நீங்கள் உங்கள் விசாவை புதுபிக்க விண்ணப்பித்திருந்தால் அதில் சில தாமதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் அணுகிய நிறுவனம் உங்களுக்குத் தேவையான தகவல்களை தர மறுக்கலாம் அல்லது தாமதிக்கலாம். இதனால் உங்களது குடியேற்ற பலன்கள் தாமதமாக வாய்ப்பு உள்ளது/ வெளி நாட்டிற்கு இடமாற்ற செய்ய நவம்பர் 2019 வரை காத்திருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic